Showing posts with label விவேகானந்தரும் சிந்தனைகளும். Show all posts
Showing posts with label விவேகானந்தரும் சிந்தனைகளும். Show all posts
Wednesday, 15 May 2013
சுவாமிஜி வாழ்வில் நடந்தவை …..
ஒரு
முறை சுவாமிஜி இருக்கும் மடத்திற்கு வந்த ஒரு சீடர் அங்கே இருந்த
களஞ்சியப் புத்தகங்களின் தொகுதியை ஆச்சரியத்துடன்
பார்த்துக்கொண்டிருந்தார்.
அவர் விவேகானந்தரிடம் வியப்புடன்
கூறினார் ‘ இந்தப் புத்தகங்கள் எல்லாவற்றையும் ஒரு பிறவியில் படித்து
முடிப்பது இயலாத காரியம்’ என்றார். சுவாமி விவேகானந்தரோ அந்தப்
புத்தகங்களில் பத்துப் பகுதிகளை முடித்துவிட்டுப் பதினோராம் பகுதியைப்
படித்துக் கொண்டிருக்கிறார் என்பது சீடருக்குத் தெரியாது.
சுவாமி விவேகானந்தரோ அந்த சீடரிடம் ‘
என்ன சொல்கிறா நீ? முதல் பத்துப் பகுதிகளில் என்ன கேள்வி வேண்டுமானாலும்
கேள். நான் பதில் சொல்கிறேன்?’ என்றார்.
சீடரோ திகைப்புடன் ‘ என்ன, இந்த நூல்களை எல்லாம் படித்து விட்டீர்களா?’ என்றார்.
சுவாமிஜியோ ‘படிக்காமல் கேள்வி கேட்கச் சொல்வேனா? என்றார்.
சீடர் சுவாமிஜி சொல்வதால் அவரிடம்
புத்தகத்தில் முதல் பத்துப் பகுதிகளிலிருந்து வெவ்வேறு விதமாக பல கேள்விகளை
வெவ்வேறு பக்கங்களிலிருந்தும் கேட்டார்.
சுவாமிஜியோ அசராமல் அனைத்திற்கும்
பதிலும் விளக்கமும் சில இடங்களில் அந்த புத்தகத்தின் மொழியிலேயே அவற்றை
எடுத்துக் கூறி அசர வைத்தார்.
சீடர் புத்தகத்தை வைத்து விட்டு ‘இது மனித ஆற்றலால் முடியாத காரியம்!’ என்றார்.
ஆனால் சுவாமிஜியோ ‘ஏன் முடியாது. இதோ
பார், பிரம்மச்சரியத்தை (கட்டுக்கோப்பான ஒழுக்கத்தையும் தியானத்தையும்
வழுவாமல் கடைபிடித்தல்) ஒழுங்காக கடைப்பிடிப்பது ஒன்றால் மட்டுமே எல்லா
கலைகளும் கணநேரத்தில் கைவசப்படும்; ஒருமுறை கேட்பவற்றைத் தவறின்றி நினைவில்
கொள்ளவும், மீண்டும் அதை அப்படியே ஒப்பிக்கவும் முடியும். இத்தகைய
பிரம்மச்சரியம் இல்லாமையால் தான் நமது நாட்டில் எல்லாம் அழிவின் எல்லைக்கே
வந்துவிட்டன’ என்றார்.
இந்த பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதால்
உண்டாகும் சக்தியை பற்றி சுவாமி விவேகானந்தர் மேற்கொண்டு விளக்குகிறார்.
குறைவாகவோ அதிகமாகவோ ஒவ்வொரு மனிதனிடமும் ஓஜஸ் (மனித ஆற்றல் அனைத்தும் ஓர்
இடத்தில் குவியும் சக்தி) சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
உடலில் செயல்படுகின்ற எல்லா ஆற்றல்களும்
அவற்றின் மிகவுயர்ந்த நிலையில் ஓஜஸாக மாறுகின்றன. ஒரு சக்திதான் இன்னொரு
சக்தியாக மாறுகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். வெளியில் மின்சாரமாக,
காந்த சக்தியாகச் செயல்படுகின்ற அதே சக்தி தான் அகச் சக்தியாக மாறுகிறது.
தசைச் சக்தியாக செயல்படுபவைதாம் ஓஜஸாக மாறுகிறது. அதே சக்தி தான் பாலுறவு
சக்தியாக, பாலுணர்ச்சியாக வெளிப்படுகிறது.
இவ்வகையில் வெளிப்படும் சக்தியை
கட்டுப்படுத்தினால் எளிதில் ஓஜஸாக மாறுகிறது. நம்மிடம் இருப்பது ஒரே சக்தி
தான். அதை தான் நாம் பல்வேறு நிலைகளில் உபயோகிக்கிறோம். எனவே
எவ்வெவற்றிர்கு சக்தியை செலவிடவேண்டும் என்பதில் தெளிவு பெற வேண்டும்.
ஒழுக்கமுடைய ஆண்களும் பெண்களும் மட்டுமே
ஓஜஸை மேலே எடுத்துச் சென்று மூளையில் சேமிக்க முடியும். அதனால் தான்
பிரம்மச்சரியம் மிகச் சிறந்த ஒழுக்கமாகக் கருதப்படுகிறது.
பிரம்மச்சரியத்திலிருந்து வழுவினால் ஒருவனிடமிருந்து ஆன்மீகம் நீங்கி
விடுவதையும் மனவலிமையையும் ஒழுக்க வீரியத்தையும் அவன் இழந்துவிடுவதையும்
உணர முடியும்.
இந்தக் காரணத்தினால் தான் பெரிய ஆன்மீக
வீரர்களைத் தந்துள்ள எல்லா மதங்களும் சிறிதும் வழுவாத பிரம்மச்சரியத்தை
எப்போதும் வற்புறுத்துவதைக் காண்கிறோம். இதே காரணத்தினால் தான், திருமணம்
செய்து கொள்ளாத துறவியர் தோன்றினர்.
எண்ணம், சொல், செயல் அனைத்திலும்
அப்பழுக்கற்ற பிரம்மச்சரியம் (கட்டுக்கோப்பான ஒழுக்கத்தையும் தியானத்தையும்
வழுவாமல் கடைபிடித்தல்) அவசியம்.
கடவுளை காண்பது
கடவுளை அறிய முடியாது என்று ஆஜ்ஞயவாதிகள்
சொல்கின்றனர். அதுவும் சரிதான். ஏனெனில் புலன்களால் இயன்றவரை அவர்கள்
முயன்றுவிட்டார்கள். ஆனால் ஏதும் நடக்கவில்லை.
ஆகையால் மதத்தையும், அதாவது கடவுள்
இருக்கிறார் என்பதையும், மரணமிலாப் பெருவாழ்வையும், இது போன்றவற்றையும்
நிருபிப்பத்ற்குப் புலனறிவை கடந்து செல்ல வேண்டும். பெரிய
தீர்க்கதரிசிகளும் மகான்களும் தாங்கள் ‘கடவுளைப் பார்த்திருப்பதாகச்’
சொல்கிறார்கள். அதாவது அவர்களுக்கு நேரடி அனுபவம் கிடைத்திருகிறது. அனுபவம்
இல்லமால் அறிவு இல்லை. ஆதலால் மனிதன் தனது ஆன்மாவில் கடவுளை காண
வேண்டும்.பிரபஞ்சத்தின் அந்த மகத்தான ஒரே உண்மையை நேருக்குநேராக கண்ட
பிறகுதான் சந்தேகங்கள் எல்லாம் நீங்கும், குழப்பங்கள் எல்லாம் தெளிவாகும்.
இது தான் ‘கடவுளை பார்ப்பது’ என்பது.
ஆன்மா ஒன்று உண்டு என்று சொல்கிறீர்கள்.
அந்த ஆன்மாவை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நமக்கெல்லாம் ஆன்மா இருந்தும்
நாம் ஏன் அதைப் பார்த்ததில்லை? இந்த கேள்விக்கு விடை அளித்தாக வேண்டும்;
ஆன்மாவைக் காண வழி கண்டாக வேண்டும். இல்லாவிட்டால் மதம் அதுஇது என்றெல்லாம்
பேசுவது பயனற்றது. ஒரு மதம் உண்மையென்றால், அது ஆன்மாவையும் ஆண்டவனையும்
உண்மையையும் நம் உள்ளத்தில் காட்ட வேண்டும். இந்த கொள்கை, அந்த கொள்கை
என்று நானும் நீங்களும் ஊழிக்கலாம்வரையில் வாதடிக்கொண்டே இருக்கலாம். ஒரு
முடிவிற்கும் வரவே மாட்டோம்.
காலங்காலமாக மக்கள் வாதிட்டுக் கொண்டுதான்
இருக்கிறார்கள். என்ன பயன்? அறிவு அங்கே போகவே முடியாது. அறிவின் எல்லைக்கு
அப்பால் நாம் போக வேண்டும். மதத்திற்கான நிரூபணம் நேரடி அனுபவம். இதோ
இந்தச் சுவர் இருப்தற்கான நிரூபணம் அதை நாம் நேரடியாகக் காண்பதுதான். சுவர்
இருக்கிறதா இல்லையா என்பதைப்பற்றி காலங்காலமாக வாதம் புரிந்தாலும், ஒரு
முடிவிற்கும் வர முடியாது; நீங்கள் நேரடியாகப் பார்த்தால் போதும், எல்லா
வாதங்களும் அடங்கிவிடும். உலகிலுள்ளோர் அனைவரும் சேர்ந்து, இந்த் சுவர்
இல்லையென்று உங்களிடம் சொன்னாலும் அதை நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஏனெனில்
உலகிலுள்ள கொள்கைகள் கோட்பாடுகள் அனைத்தையும்விட மேலான சாட்சி உங்கள்
கண்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ள
வேண்டியதில்லை. உண்மையை ஆராய வேண்டியது நமது கடமை. மற்ற விஞ்ஞானங்களை
போலவே மதத்தில் உள்ளவற்றையும் நேருக்கு நேராக காணலாம்.அதற்கு சில உண்மைகளை
சேகரிக்க வேண்டும். ஆனால் ஐம்புலன்களுக்கு கட்டுப்பட்டு இந்த அறிவுத்
தளத்தைக் கடந்து சென்றால் தான் இது முடியும்.மத உணமைகளை ஒவ்வொருவரும்
சரிபார்க்க வேண்டும். ஒரே லட்சியம் கடவுளை காண்பது தான். சக்தி பெறுவது
நமது லட்சியம் அல்ல.உண்மை-அறிவு-அன்பே லட்சியம்; அன்பே கடவுள்.
—-சுவாமி விவேகானந்தர்…..
சமூக சீர்த்திருத்த முறை
நீங்கள் உண்மையான சீர்திருதக்காரர்களாக
விரும்பினால் மூன்று விஷயங்கள் அவசியம். முதலாவது உணர்ச்சி, உங்கள்
சகோதர்களுக்காக உண்மையிலேயே நீங்கள் இரங்குகிறீர்களா ? இவ்வுலகில் இவ்வளவு
துயரமும், அறியாமையும், மூட நம்பிக்கையும் இருந்து வருவது கண்டு
உண்மையிலேயே மனவேதனை அடைகீறிர்களா? இந்நாட்டில் வாழும் மனிதர்கள் எல்லாம்
உங்கள் சொந்த சகோதர்களே என உணர்கீறிர்களா? இவ்வுணர்ச்சி உங்கள் உடம்பு
முழுவதிலும் ஊறிப் போயிருக்கிறதா? அது உங்கள் குருதியில் கலந்து
ஓடுகிறதா?உங்கள் நரம்புகளில் அது துடிக்கிறதா? உங்கள் உடம்பின் ஒவ்வொரு தசை
நாரிலும் அது ஊடுருவி நிற்கிறதா? அந்த அனுதாப உணர்ச்சி உங்களுக்குள்ளே
பொங்கித் ததும்புகின்றதா? அவ்வாறாயின் முதற்படி எறிவிட்டிர்கள்.
அடுத்தாற்போல் பரிகாரம் ஏதேனும் கண்டு பிடித்திர்களா என்று சிந்திக்க
வேண்டும். பழைய கொள்கைகள் மூடக்கொள்கையாக இருக்கலாம்.
ஆனால் அந்த
மூடக்கொள்கைத்திரளின் உள்ளே சத்தியம் என்னும் தங்கக்கட்டிகள் புதைந்து
கிடக்கின்றன. குப்பையைப் போக்கி விட்டுத் தங்கத்தை மட்டும் வைத்துக்கொள்ள
நீங்கள் வழி கண்டுபிடித்திருக்கீறிர்களா? மூன்றாவது இன்னும் ஒன்று அவசியம்.
உங்கள் நோக்கம் என்ன? பொன்னாசை, புகழாசை, அதிகார ஆசை என்னும் இவை
உங்களிடம் அறவே இல்லையென்று நிச்சியமாக சொல்ல முடியுமா?
ஆயிரக்கணக்கான மனிதர்களால் மேடைப்
பிரசங்கங்கள் செய்யப்பட்டு விட்டன. இந்து சமூகத்தின் மீதும், இந்து
நாகரிகத்தின் மீதும் கணக்கில்லாத கண்டங்களை சொரிந்தாகிவிட்டது.எனினும்
செயல்முறையில் நற்பயன் எதுவும் விளையக்காணோம். இதன் காரணம் என்ன? காரணம்
கண்டுபிடிக்க அதிக சிரமப்படவேண்டியதில்லை. கண்டனத்தில் தான் காரணம்
இருக்கிறது. நன்மை புரிவதற்கு வழி கண்டனம் செய்தல் அன்று.
எனக்குச் சீர்திருத்தத்தில் நம்பிக்கை
இல்லை, வளர்ச்சியிலேயே நம்பிக்கை உண்டு. நானே கடவுளின் இடத்தில இருப்பதாக
எண்ணிக்கொண்டு, ‘இவ்வழிதான் போக வேண்டும்; அவ்வழி நோக்கக்கூடாது’ என்று
சமூகத்துக்கு கட்டளைகள் பிறப்பிக்க எனக்கு துணிவு இல்லை.
என்னுடைய இலட்சியம், தேசிய வழிகளில் வளர்ச்சிப் பெருக்கம், முன்னேற்றம் என்னும் இவைகளாகும்.
சமுதாயம்
முழு
வளர்ச்சி அடைந்த மனிதனாகிய குழந்தை என்ற ஒரு நிலை இருக்க முடியாது.
மனிதன், குழந்தை என்ற இரண்டு சொற்களுமே ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன.
எனவே பரிபூரண நிலையை அடைந்த சமுதாயம் என்று ஒன்று இருபப்தற்கில்லை.
சமுதாயத்தின் இத்தகைய ஆரம்ப நிலைகளில்ருந்து மனிதன் வளர்ச்சி அடைய
வேண்டும்.அவன் வளர்ச்சியும் அடைவான்….” உனக்குள் இருக்கும் தாமரையை நீ ஏன்
மலரும் படிச் செய்யக்கூடாது ?அப்படி செய்தால் தேனீக்கள் அங்கே தாமாக வந்து
சேரும் ” என்று என்னுடைய குருநாதர் சொல்வது வழக்கம்.
பழைய சமுதாயமானாலும் புதிய சமுதாயமானாலும்
உண்மை எதற்கும் தலை வணங்காது. சமுதாயம் தான் உண்மைக்கு தலை வணங்க வேண்டும்
அல்லது அழிய வேண்டும். உண்மையை அடிப்படையாகக் கொண்டு தான் சமுதாயங்கள்
உருவாக்க வேண்டும். சமுதயாத்திருக்கு ஏற்றாபோல் உண்மை தன்னை மாற்றி
அமைத்துக்கொள்ளக் கூடாது. எங்கு உயர்ந்த உண்மைகள் நடைமுறையில் இருகின்றன்வோ
, அந்த சமுதாயம் தான் சிறந்தது. இதுவே என்னுடைய கருத்து.
சமுதாயம் உயர்ந்த உண்மைக்குத் தகுதி
உடையதாக இல்லாவிட்டால் , அதை தகுதி உடையதாக செய். எவ்வளவு விரைவில் இதை
செய்ய முடியுமோ , அந்த அளவுக்கு நன்மை ஏற்படும்.
—-சுவாமி விவேகானந்தர்….
மூட நம்பிக்கைகளுக்கு உள்ள வேறுபாடு.
தற்காலத்தில் ஒருவன் மோசஸ் ,
இயேசு கிறிஸ்து , புத்தர் ஆகியவர்களின் மேற்கோள்களை எடுத்துக்காட்டாக
சொன்னால் , அவன் ஏளனத்துக்கு ஆளாகிறான். ஆனால் ஒரு ஹக்ஸ்லி,டின்டால்,
டார்வின் ஆகிய இவர்களின் பெயர்களை அவன் சொல்லட்டும். அவர்களுடைய கருத்து
என்னவாக இருந்தாலும் மக்கள் அதை அப்படியே கேள்விக்கிடமின்றி
நம்பிவிடுவார்கள்.
‘ஹக்ஸ்லி இப்படி சொல்லிருக்கிறார்’ என்று
குறிப்பிட்டால் அதுவே பலருக்கு போதுமானதாக இருக்கிறது. நாம் மூட
நம்பிக்கையிலிருந்து விடுபட்டவர்கள்தாம் என்றாலும் , முன்பு கூறியது மத
வாழ்க்கை சேர்ந்த மூட நம்பிக்கையாக இருந்தது. பின்னால் குறிப்பிட்ட இது ,
விஞ்ஞான ரீதியான மூட நம்பிக்கையாக இருக்கிறது. மதத்தை சேர்ந்த மூட
நம்பிக்கைகளின் மூலமாகத் தான் உயிரோட்டம் தரக்கூடிய ஆன்மிக கருத்துகள்
வெளிவந்திருக்கின்றன. விஞ்ஞான ரீதியான இன்றைய மூட நம்பிக்கையின் மூலமாகவே
காமமும் , பேராசையும் விளைந்திருகின்றன. முதலில் கூரிய மூட நம்பிக்கை
கடவுள் வழிபாடாக இருந்தது. பின்னால் கூரிய இதுவோ அருவருக்கத் தக்க செல்வம்,
புகழ், அதிகாரம் ஆகியவற்றின் வழிபாடாக இருக்கிறது. இது தான் இந்த இரண்டு
மூட நம்பிகைகளுக்கும் உள்ள வேறுபாடு.
உலகின் எல்லையற்ற சக்தி உங்களுக்கே
சொந்தமானது. உங்கள் மனத்தை மறைத்துக் கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளை
விரட்டி அடியுங்கள். நாம் துணிவுடன் இருப்போம். நமது மனத்தை பலவீனமாக்கி,
மூடநம்பிக்கையில் ஆழ்த்தி, மந்தமானவர்களாக்கி, சாத்தியமில்லாதவற்றை
ஆசையுறச் செய்பவர்களாகவும் அற்புத செயல்களை நம்புவர்களாகவும் நம்மை
ஆக்குகின்ற எந்த நெறியையும் நான் விரும்பவில்லை. அவற்றின் பலன்
அபாயகரமானது. அத்தகைய நெறிகள் ஒருபோதும் நன்மை செய்வதில்லை. அவை மனத்தை
மந்த நிலையில் ஆழ்த்தி காலப்போக்கில் உண்மையை உணர, உண்மைவழியில் வாழ
முடியாத அளவுக்கு மனத்தை பலவீனப்படுத்திவிடுகின்றன.
–சுவாமி விவேகானந்தர்…..
சாதி ஏற்பாட்டின் உட்கருத்து…
ஐரோப்பிய நாகரிகத்திற்குரிய வழிமுறை
பலத்காரம் ஆகும். ஆரிய நாகரிகமோ வர்ண தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த
வர்ணப் பிரிவினை நாகரிகம் என்னும் உச்சிக்கு மக்களை அழைத்துச் செல்லும்
படிக்கட்டாகும். ஒருவனுடைய கல்வியும், அறிவு பயற்சியும் அதிகமாக ஆக அவன்
அந்தப் படிக்கட்டின் மூலமாக மேலே மேலே ஏறிக்கொண்டிருக்கிறான்.ஐரோப்பிய
நாகரிகத்தில் பலசாலிகளுக்கே வெற்றி; பலவீனர்கள் அழிந்து போக வேண்டியது
தான். ஆனால் பாரத நாட்டிலோ ஒவ்வொரு சமூக விதியும் பலவீனர்களைப்
பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டதாகும்.
சாதி என்பது நல்ல ஏற்பாடுகள். ஆனால்
உண்மையில் சாதி என்றால் என்ன என்று லட்சத்தில் ஒருவர் கூட அறிந்து
கொள்வதில்லை. உலகில் சாதி இல்லாத நாடே இல்லை. இந்தியாவில் நாம் சாதி
என்னும் கிழ்ப்படியில் தொடங்கி சாதியற்ற மேல் நிலையை அடைகிறோம். சாதி
என்பது இந்த தத்துவத்தை அடிப்படையாக கொண்டது ஆகும். இந்தியாவில், பிராமணன்
மனித குலத்தின் இலக்கியமாவான்.ஒவ்வொருவனையும் பிராமணன் ஆக்குவது சாதி
ஏற்பாட்டின் நோக்கமாகும். இந்திய வரலாற்றை படித்தால் கீழ் வகுப்பாரை மேலே
கொண்டுவர எப்போதும் முயற்சிகள் செய்யப்பட்டு வந்திருப்பதை காண்பீர்கள். பல
வகுப்புகள் கைதூக்கி விடப்ப்படிருகின்றன. மற்றும் பல வகுப்புகளும் மேலே
வந்து முடிவில் எல்லோரும் பிராமணர்கள் ஆவார்கள். இதுவே சாதி ஏற்பாட்டின்
நோக்கமாகும். யாரையும் கீழே கொண்டுவரமால் எல்லோரையும் மேலே தூக்கிவிட
வேண்டும். இதைப் பெரிதும் பிராமணர்களே செய்தாக வேண்டும். எல்லா உரிமை பெற்ற
கூட்டங்களும் தங்களுக்குத் தாங்களே குழி வெட்டிக் கொள்கிறார்கள். ஆகையால்
மற்றவர்களையும் தங்களுக்குச் சமமாக உயர்த்தலே அவர்கள் கடமை ஆகும்.
சாதி நல்லது; உரிமைதான் தீயது.
சாதி என்பது நல்ல ஏற்பாடே. சமூக
வாழ்க்கையை ஒழுங்கப்படுத்துவதற்கு அது ஒன்றே இயற்கை வழி. எந்த சமூகத்திலும்
மனிதர்கள் தனித்தனிக் குழுவாகச் சேர்ந்தே ஆகவேண்டும். இந்த இயற்கை நியதியை
மாற்ற முடியாது. நீங்கள் எங்கே போனாலும் சாதி இருப்பதைக் காணலாம்.சாதி
அடியோடு போகவேண்டியது இல்லை. அதை அடிக்கடி சீர்திருத்தி அமைத்தலே அவசியம்
ஆகும்.சாதியை அடியோடு ஒழிக்க விரும்புதல் அறிவீனமாகும்.
நம்மை ஒரு தனிச்சமூகமாகக் காப்ற்றுவதற்கு
இந்த ஏற்பாடுகள் அவசியமாக இருந்திருக்கின்றன. தற்காப்புக்கு இந்த அவசியம்
இல்லாமல் போகும் போது அவை இயற்கை மரணம் அடையும். ஐரோப்பாவிலும்
அமெரிக்காவிலும் உள்ள சாதி ஏற்பாட்டைக் காட்டிலும் இந்திய சாதி ஏற்பாடு
சிறந்ததாகும். அது முற்றிலும் நல்லது என்று நான் சொல்லவில்லை. சாதி
இல்லாவிட்டால் இப்போது உங்கள் கதி என்னவாக இருக்கும்? உங்கள் கல்வியும்,
பிறவும் என்ன கதி அடைந்திருக்கும்?
தனி வகுப்புகளாகப் பிரிந்தமைதல்
சமூகத்தின் இயற்கை. விசேஷ உரிமைகளே தொலைதல் வேண்டும்.சாதி என்பது ஓர்
இயற்கை நியதி. சமூக வாழ்வில் நான் ஒரு கடமையை செய்கிறேன்; நீ மற்றொரு
கடமையை செய்கிறாய். நீ நாட்டை ஆள்கிறாய்; நான் பழைய செருப்பு தைக்கிறேன்.
இதனாலேயே நீ என்னைவிட பெரியவனாவது எவ்வாறு? நான் நாடாள முடியாதெனில் நீ
செருப்பு தைக்க முடியுமா? நான் செருப்பு தைப்பதில் திறமையானவன்; நீ வேதம்
ஓதுவதில் திறமையானவன்; அதனால் நீ என் தலை மீதேறி மிதிக்க வேண்டும் என்பது
என்ன?
ஆண்டவன் மனித குலத்திற்கு அளித்த மிகச்
சிறந்த சமூக அமைப்புகளில் சாதி ஏற்பாடு ஒன்று என்பதாக நாங்கள் நம்புகிறோம்.
விலக்க முடியாத பல குறைபாடுகளும், அந்நிய நாட்டவரின் கொடுமைகளும்
எல்லாவற்றிற்கும் மேலாக பிராமணர் என்னும் பெயருக்கு தகுதியற்ற பிராமணர்
பலரின் மகத்தான அஞ்ஞானமும் கர்வமும், அந்த உரிய அமைப்பானது உரிய பயனனியா
வண்ணம் செய்திருக்கின்றன. அவ்வாறு இருப்பினும், அந்த அமைப்பினால் பாரத
நாட்டுக்கு ஆச்சரியகரமான நன்மைகள் விளைதிருகின்றன என்றும், இனியும் இந்திய
சமூகத்தை அதன் இலட்சியத்துக்கு கொண்டு சேர்க்க போவது அந்த அமைப்பே என்று
நாங்கள் நம்புகிறோம்..
தற்கால சாதி வேற்றுமையானது இந்தியாவின்
முன்னேற்றத்துக்கு ஒரு தடைக்கல்லாகும். அது வாழ்வை குறுக்குகின்றது;
கட்டுப்படுத்துக்கின்றது; பிரிவினை செய்கின்றது. அறிவு வெள்ளத்தின் முன்பாக
அது விழுந்து மாயும்.
தற்போதைய அரசாங்கத்தின்கீழ், எவனும் தன்
வாழ்விற்காக எந்த தொழிலும் செய்யலாம். தடை எதுவும் கிடையாது. எனவே வாழ்க்கை
போட்டி வலிமையாகிவிட்டது. இதன் பயனாக ஆயிரக்கணக்கானவர்கள் அடியில் கிடந்து
உழலாமால், தங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் பயன்படுத்தி மேல் நிலைக்கு
வந்திருக்கிறார்கள்.
–சுவாமி விவேகானந்தர் …..
சாதிப் பிரச்சினை
சமூகத்திற்கே சாதி —சமயத்திற்கு அன்று..
சமயத்துறையில் சாதி என்பது கிடையாது. சாதி
என்பது ஒரு சமுக ஏற்பாடே ஆகும்.மிக உயர்ந்த சாதியைச் சேர்ந்தவனும் மிக
தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனும் இந்த நாட்டில் துறவி ஆகலாம்.அப்போது இரண்டு
சாதியும் சமமாகின்றன.
சாதி முதலிய நமது சமூக ஏற்பாடுகள் சமயத்
தொடர்புடையனவாக வெளிக்குத் தோன்றினாலும் உண்மையில் அவை அத்தகையனவல்ல. நம்மை
ஒரு தனி சமூகமாக காப்பாற்றி வருவதற்கு அந்த ஏற்பாடுகள் அவசியமாக இருந்து
வந்திருகின்றன.தற்காப்புக்கு அவசியம் இல்லை என்னும்போது அவை இயற்கை
மரணமடைந்து மறையும்.
கௌதம புத்தர் முதல் ராம்மோகன் ராய்
வரையிலும் ( சீர்திருத்த்காரர்) எல்லோரும் ஒரு தவறு செய்திருகிறார்கள்.
அவர்கள் சாதியை சமயப் பிரிவு என்று கொண்டு சாதி, சமயம் எல்லாவற்றையும்
சேர்த்து அழித்திவிட முயன்றார்கள். எனவே அவர்கள் அடைந்தது தோல்வியே ஆகும்.
ப்ரோகிதர்கள் என்ன பிதற்றினாலும் சரியே, சாதி என்பது ஒரு சமூக ஏற்பாடே
என்பதில் சந்தேகமில்லை. அந்தப் பிரிவு தன்னுடைய வேலையை செய்த பின்னர்
இப்போது அழுகி நாற்றமெடுத்திருக்கிறது. இந்திய ஆகாய வெளியில் அந்த நாற்றம்
நிறைந்துள்ளது.
சாதி ஏற்பாடு வேதாந்த மதத்துக்கு
விரோதமானது. சாதி என்பது ஒரு வழக்கமேயல்லாது வேறில்லை.நமது பெரிய
ஆசாரியர்கள் எல்லோரும் அதைத் தாக்க முயன்று இருக்கிறார்கள்.புத்தர்
காலத்தில் இருந்து சாதிக்கு எதிராக அநேகர் பிரசாரம் செய்து வந்தார்கள்.
ஆனால் ஒவ்வொரு முறையுலும் அது வலிமை பெற்று வந்ததேயன்றி வேறு பயனில்லை.
இந்தியாவின் அரசியல் அமைப்புகளிருந்து வளர்ச்சி பெற்றதே சாதி ஆகும். அதை
பரம்பரையான தொழிற் சங்க முறை என்று சொல்லலாம். ஐரோப்பாவுடன் நேர்ந்த தொழிற்
போட்டியானது எந்தப் போதனையும் விட சாதியை அதிகம் தகர்த்து இருக்கிறது..
சாதிப் பிரச்சினையைத் தீர்க்கும் வழி:
சாதி சண்டைகள் போடுவதில் பயனில்லை. அதனால்
நன்மை என்ன? அந்தச் சண்டை நம்மை இன்னும் அதிகமாகப் பிரிக்கும்; இன்னும்
அதிகமாக பலவீனபடுத்தும்; இன்னும் அதிகமாக தாழ்த்தும்.சாதி பிரச்சினையை
தீர்ப்பதற்கு வழி மேலே உள்ளவர்களைக் கீழே இழுப்பதன்று; கீழே உள்ளவர்களை
மேலுள்ளவர்களின் நிலைக்கு உயர்த்துவதே ஆகும்.
நமது லட்சியத்தின் மேல்படியில் பிராமணன்,
கீழ்ப்படியில் சண்டாளன். சண்டளானை பிராமண நிலைக்கு உயர்த்துவதே நமது வேலை.
உயர் வகுப்பாரின் கடமை தங்களுடைய வீசேஷ உரிமைகளைத் தாங்களே தியாகம்
செய்வதாகும். இது எவ்வளவு விரைவில் நடக்கிறதோ அவ்வளவுக்கு நன்மை. தாமதம் ஆக
ஆக அவை அதிகமாக கெட்டுக்கொடிய மரணம் அடைகின்றன.
தான் பிராமணன் என்பதாக உரிமை பாராட்டிக்
கொள்ளும் ஒவ்வொருவனும் அவ்வுரிமையை இரண்டு வழிகளில் நிரூபிக்க வேண்டும்.
முதலாவது தன ஆன்மிக மேன்மையை விளங்க செய்தல்; இரண்டாவது மற்றவர்களைத் தன்
நிலைக்கு உயர்த்தல். ஆனால் தற்போது அவர்களின் பலர் பொய்யான பிறவிக்
கர்வத்தையே பேணி வருவதாகக் காணப்படுகிறது. பிராமணர்களே ! எச்சரிக்கை ! இது
சாவின் அறிகுறி ஆகும்.விழித்தெழுங்கள். உங்களைச் சுற்றியுள்ள பிராமணர்
அல்லாதாரை உயர்த்துவதின் மூலம் உங்களுடைய மனிதத் தன்மையையும், பிராமணப்
பண்பையும் நிரூபியுங்கள். ஆனால் இதை எஜமானன் என்ற இறுமாப்புடன், குருட்டு
நம்பிக்கை கலந்த கர்வத்துடன் செய்ய வேண்டாம். ஊழியன் என்ற தாழ்மை உள்ளதுடன்
செய்யுங்கள்.
பிராமணர்களை நான் வேண்டிக் கொள்வதாவது:
‘உங்களுக்குத் தெரிந்திருப்பதை பிறருக்குக்
கற்பியுங்கள். பல நூற்றாண்டு காலமாக நீங்கள் சேர்த்து வைத்திருக்கும்
ஞானச் செல்வத்தை எல்லாருக்கும் அளியுங்கள்.இவ்வாறு இந்திய ஜாதியை உயர்த்த
பெருமுயற்சி செய்யுங்கள்’ என்பதே.உண்மை பிராமணம் எது என்பதை நினைவு
கூர்ந்திருத்தல் பிராமணர்களின் கடமை ஆகும். பிராமணனிடம் ‘தர்ம பொக்கிஷம்’
இருப்பதினாலேயே அவனுக்கு இவ்வளவு சிறப்புகளும், விசேஷ உரிமைகளும்
அளிக்கப்பட்டுள்ளன என்று மனு சொல்கிறார். பிராமணன் அந்தப் பொக்கிஷத்தைத்
திறந்து அதிலுள்ள செல்வங்களை உலகிற்கெல்லாம் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.
பிராமணர் அல்லாதாருகெல்லாம் நான் கூறுவதாவது:
‘பொறுங்கள்; அவசரப்பட வேண்டாம்.
பிராமணனுடன் சண்டையிட எங்கே சந்தர்ப்பம் என்று காத்திராதிர்கள். நீங்கள்
கஷ்டப்படுவதற்குக் காரணம் உங்கள் தவறே ஆகும். ஆன்மிக துறையையும், சமஸ்கிரத
கல்வியையும் அலட்சியம் செய்யும் படி உங்களுக்கு யார் சொன்னார்கள்? இவ்வளவு
காலம் என்ன செய்து கொண்டிருந்தீரிகள்? இத்தனை நாள் அலட்சியமாக இருந்து
விட்டு, இப்போது மற்றவர்கள் உங்களை விட அதிகமூளையும், ஊக்கமும், திறமையும்
உள்ளவர்களாக இருப்பது குறித்து எரிச்சலடைவதில் யாது பயன்? பயனற்ற
விவாதங்களிலும், பத்திரிகைச் சண்டைகளிலும் உங்கள் சொந்த வீடுகளில் வீணான
போர் நடத்திப் பாவம் தேடிக் கொள்வதற்குப் பதிலாக பிராமணன் பெற்றிருக்கும்
அறிவுச் செல்வத்தை அடைவதில் உங்கள் எல்லாச் சக்திகளையும் பயன்படுத்துங்கள்.
வழி அதுவே ஆகும்..
தாழ்ந்த சாதியர்களுக்கெல்லாம் நான் சொல்வதாவது:
‘உங்களுக்கு ஒரே வழி சமஸ்கிருதம் படித்தலே
ஆகும். உயர் சாதியார்களிடத்து எரிந்து விழுதலும், அவர்களுடன் சண்டை
போடுதலும் பயனளியா. அவ்வழியினால் யாருக்கும் நன்மை இல்லை. அதனால்
துரதிர்ஷ்டவசமாக ஏற்கனவே பிரிவினை அதிகமாக உள்ள நமது சமுகத்தில் நாளுக்கு
நாள் அதிக வேற்றுமையே ஏற்படும்.உயர் சாதிகளின் வலிமையெல்லாம் அவர்களுடைய
கல்வியும், பயிற்சியுமே ஆகும். நீங்களும் அவற்றைக் கைக்கொள்வது என்றே சாதி
ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் வழி ஆகும்..
நீங்கள் ஏன் சமஸ்கிரத பண்டிதர்கள்
ஆகக்கூடாது? இந்தியாவிலுள்ள எல்லாச் சாதிகளுக்கும் சமஸ்கிரத கல்வி
அளிப்பதற்காக நீங்கள் ஏன் கோடிக்கணக்கான பணம் செலவு செய்யலாகாது?
இவைகளை நீங்கள் செய்து முடிக்கும் போது
பிராமணனுடன் சமம் ஆகீறிர்கள். இந்தியாவில் செல்வாக்குப் பெறும் இரகசியம்
அதுவே ஆகும் இந்தியாவில் சமஸ்கிரதமும் மரியாதையும் பிரிக்க முடியாதவையாக
இருக்கின்றன. நீங்கள் சமஸ்கிரத கல்வி பெற்றவுடன் உங்களுக்கு விரோதமாக
யாரும் எதுவும் சொல்லத் துணியார்கள்.
—-சுவாமி விவேகானந்தர் ……..
கிறிஸ்துவ மதம்
கிருஸ்துவ மதம் முதல் மூன்று
நூற்றாண்டுகளில் தன்னை உலகத்திருக்கு தெரிவித்து கொள்வதில்கூட வெற்றி பெற
முடியவில்லை. வாள்மூலம் கான்ஸ்டன்டைன் அதற்கு தனது நாட்டில் ஓர் இடம்
கொடுத்து நாள்முதல் ஆன்மிக அல்லது லெளகீக நாகரிக முன்னேற்றத்திற்கு
கிற்ஸ்துவ மதம் எதாவது உதவி செய்திருக்கிறதா? பூமி ஒரு சுற்றி வரும் கிரகம்
என்று முதன் முதலாக நிருபித்த ஐரோப்பிய அறிஞனுக்குக் கிருஸ்துவ மதம் என்ன
பரிசு அளித்தது?
எந்த விஞ்ஞானியையாவது எப்போதாவது கிருஸ்துவ
மதம் அங்கீகரித்துத்திருகிறதா? குற்றவியல் மற்றும் சமூகவியல் சட்டங்கள் ,
கலை ,வியாபாரம் இவற்றின் தேவைகளை பூர்த்தி செய்ய கிருஸ்துவ இலக்கியத்தால்
முடியுமா? இப்போதும் சர்ச் , மதம் அல்லாத இலக்கியத்தை பரவவிடுவதில்லை.
தற்க்கால கல்வியையும் விஞ்ஞானத்தை அறிந்த ஒருவன் இன்று உண்மை கிருஸ்துவனாக இருக்க முடியுமா? புதிய ஏற்பாட்டில் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ எந்தக் கலையையோ, விஞ்ஞானத்தையோ புகழ்ந்து ஒரு வார்த்தை கூடக் கிடையாது.
ஐரோப்பாவின் உன்னதச் சிந்தனையாளர்களான
வால்டர்,டார்வின்,புக்னர்,ப்லமேரியன், விக்டர் போன்ற பலரையும் இன்றைய
கிருத்துவர்கள் கண்டனம் செய்யவும் நிந்திக்கவுமே செய்கின்றனர்.
கிருத்துவர்கள் ஐரோப்பிய யூதர்களை எப்படி
நடத்துகிறார்கள்? மத ஸ்தாபனங்கள் நீங்கலாக ஐரோப்பாவின் வேறெந்த துறையும்
பைபிள்க்கு சம்மந்தமானவை இல்லை.கிருத்துவ மதத்திற்கு எதிராகவும் பைபிள்க்கு
மாறாகவும் ஐரோப்பா ஒவ்வொரு உயர்வையும் அடைந்தது. கிருத்துவ மதம்
ஐரோப்பாவில் இன்றும் முன் போலவே வலிமை பெற்றதாக இருக்குமானால் பாஸ்டர்,கோக்
போன்ற விஞ்ஞானீகளையெல்லாம் உயிருடன் கொளுத்தியிருப்பார்கள்; டார்வின்
போன்றோரை கழுவேற்றியிருப்பார்கள்.
நவீன ஐரோப்பாவில் கிருத்துவம், நாகரிகம்
இரண்டும் வெவ்வேறனாவை. நாகரிகம் தன் நிரந்தர எதிரியான மதத்தை அழிக்கவும்,
பாதிரி வர்க்கத்தையே வெறுக்கவும், அவர்களின் கைவசமிருக்கின்ற கல்வி
நிறுவனங்களையும் தர்ம ஸ்தாபனங்களையும் பிடுங்கி கொள்ளவும் கங்கணம்
கட்டிக்கொண்டுள்ளது.
அறிவிலிகளான விவசாயிகளின் கூட்டம்
இல்லையென்றால், கிருத்துவ மதம் தன் இப்போதைய பரிதாபகரமான நிலையிலும் கூட
ஒரு விநாடி இருக்க முடியாது; வேரோடு பிடுங்கபட்டிருக்கும். ஏனெனில்
நகரவாசிகளான ஏழைகள் இப்போது சர்ச்சின் பரம விரோதிகள்.
ஒவ்வொரு கிறிஸ்துவ குழந்தையும் இந்துக்களை
‘இழிந்தவர்கள்’ ‘வெறுக்கத்தக்கவர்கள்’ என்றும், உலகிலே மிகவும் பயங்கரமான
பேய்களென்றும் அழைக்கும் படி அவர்களுக்குப் பாடம் புகட்டுகிறார்களே, இந்த
ஏசுவின் சீடர்களுக்கு இந்துக்கள் என்ன குற்றம் செய்துவிட்டார்கள்?
கிறிஸ்துவர்கள் அல்லாதவர்களை வெறுக்க
வேண்டும், அதிலும் முக்கியமாக இந்துக்களை வெறுக்க வேண்டும் என்பதும்
ஞாயிற்று கிழமைகளில் பள்ளிச் சிறுவர்களுக்கு கற்பிக்கப்படும் படங்களுள் ஒரு
பகுதியாக இடம் பெறுகிறது. ஏனெனில் அந்தக் குழந்தைப் பருவம் முதல் அவர்கள்
ஒவ்வொரு காசையும் கிறிஸ்துவ மதப் பிரச்சார அமைப்புக்களுக்கு கொடுக்க
வேண்டுமே!
உண்மைக்காக வேண்டாம், தங்கள் சொந்தக்
குழந்தைகளின் நல்லொழுக்கத்திற்காகவாவது கிறிஸ்துவப் பாதிரிகள் இதைத்
தடுக்கக் கூடாதா? இப்படிப்பட்ட குழந்தைகள் இரக்கமற்ற கொடியவர்களாக
வளர்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
மீளா நரகத்தின் சித்திரவதைகளையும்,
அங்குக் கொழுந்துவிட்டெரியும் நெருப்பையும், கந்தகக் கற்களையும் பற்றி
எவ்வளவு அதிகமாக ஒருவர் சித்தரிக்கிறரோ,அந்த அளவுக்கு அவர் கிறிஸ்துவ
பழமைவாதிகளிடையே உயர்ந்த இடம் பெறுகிறார். அவர்களின் மத மறுமலர்ச்சி
பிரச்சாரத்தை கேட்டுவிட்டு எனது நண்பரின் பணிப்பெண் ஒருத்தியைப்
பைத்திக்கரா விடுதிக்கு அனுப்ப நேரிட்டது. நரகத்தின் நெருப்பும் அங்குள்ள
கந்தகத்தின் சூடும் அவளுக்கு பொறுக்க முடியாமால் போய்விட்டது.
இந்து மதத்திற்கு எதிராகச் சென்னையில்
வெளியிடப்பட்டிருக்கும் நூல்களைப் பாருங்கள். கிறிஸ்துவ மதத்தை எதிர்த்து
ஓர் இந்து அதே போல் ஒரு வரி எழுதட்டும், பாதிரிகள் பழிக்குபழியாக
நெருப்பைக் கக்கிவிடுவார்கள்.
எனது நாட்டின் அருமை மக்களே! நான் இங்கு
ஒரு வருடத்திற்கு மேலாக இருக்கிறேன். ஏறக்குறைய இங்குள்ள சமுகத்தின்
மூலைமுடுக்குகள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். அனைத்தையும் ஒப்பிட்டுப்
பார்த்த பிறகு நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம் இதுதான்: பாதிரிகள்
கூறுவதுபோல் நாம் பேய்களும் அல்ல, தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொள்வது
போல் அவர்கள் தேவர்களும் அல்ல.
—–சுவாமி விவேகானந்தர்…..
ஏசு என்ற ஒருவர் இருந்தாரா?
ஏசு
இந்திய நாட்டிற்கு வந்து விட்டார் என்று சிலர் டமாரமடித்து
வருகிறார்கள்.அவர்களுக்காகவும் சொல்கிறேன். ஐயோ , என் நண்பர்களே! ஏசுவும்
வர வில்லை , யஹோவாவும் வரவில்லை, அவர்கள் வரப் போவதும் இல்லை. இப்போது
அவர்கள் தங்கள் வீட்டை காப்ப்ற்றுவதில் முனைந்திருக்கிறார்கள்.
நமது
நாட்டிற்கு வர அவர்களுக்கு நேரமே இல்லை.
இந்திய மண்ணில் அதே பழம் பெரும் சிவ
பெருமான் உடுக்கையை ஒலித்தபடி என்றெண்டும் இருப்பார், அன்னை காளி மிருக
பலியை என்றென்றும் பெற்று வருவாள். அவளையே ஏசுவின் தாய் மேரி என்று
கிறிஸ்துவர்கள் வழிபடுகின்றனர். ஆசை கண்ணன் எப்போதும் குழலூதி
கொண்டிருப்பான்.
உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால்
போய்த் தொலையுங்களேன். கையளவு மக்களாகிய உங்களுக்காக நாடே பொறுத்து
பொறுத்து, நலிவுற்று நாசமாக வேண்டும் நினைக்கிரிகளா? மனம்போனபடி
வாழ்வதற்கேற்ற இடமாகத் தேடி பார்த்து நீங்கள் என் போக கூடாது? உலகம் தான்
பரந்து விரிந்து கிடைக்கிறதே! போவதற்கென ?
ஆனால் போக மாட்டார்கள். அதற்குரிய வலிமை
அவர்களிடம் எங்கே? சிவபெருமானின் உப்பை தின்று விட்டு, அவருக்கே துரோகம்
செய்து கொண்டு, ஏசுவின் புகழ் பாடுவார்கள். கேவலம்! இத்தகைய அந்நியர்களிடம்
சென்று, ‘அந்தோ ! நாங்கள் தாழ்ந்தவர்கள், அற்பர்கள், அதலபாதளத்தில்
கிடக்கிறோம். எங்கள் அனைத்தும் தாழ்ந்தவை’ என்று புலம்புகிரிகள். நீங்கள்
சொல்வது சரிதான், நீங்கள் சத்திய சந்தர்கள் தான். நீங்கள் எக்கேடு கெட்டும்
போங்கள். ஆனால் ‘நாங்கள்’ அற்பர்கள் என்று நாட்டு மக்கள் அனைவரையும் ஏன்
உங்களுடன் சேர்த்துக் கொள்கிரிகள் ? இது என்ன நியாயம் நண்பர்களே?
ஏசு என்ற ஒருவர் எப்போதவது இருந்தாரா?
ஏசு என்ற ஒருவர் எப்போதவது இருந்தாரா இல்லையா என்பதில் பலத்த கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது. புதிய ஏற்பாட்டின் நான்கு நுால்களுள் ஜான்
எழுதிய நுால் உண்மைக்கு மாறாதது என்று கூறி
புறக்கணிக்கப்பட்டுவிட்டது.மற்ற மூன்று நுால்களும்கூட சில புராதன
நுால்களைப்பிரதி செய்து எடுக்கப்ட்டது என்பது ஒரு கருத்து.அவையும்
ஏசுநாதரின் காலத்திற்று வெகு காலத்திற்கு பிறகு பிரதி செய்யப்பட்டவை
மேலும் ஏசுநாதர் பிறந்ததாக கூறப்படும் காலத்தில் ஜொஸீஃபஸ்,ஃபிலோ
என்ற இரு வரலாற்று ஆசிரியர்கள் யூதர்களிடையே வாழ்ந்தனர்.யூதர்களிடையேில்
தோன்றிய சிறுசிறு பிரிவினரைப்பற்றிக்கூட குறிப்பிட்டுள்ள
இவர்கள்,ஏசுவைப்பற்றியோ,கிறிஸ்தவ மதத்தை பற்றியோ.ரோமானிய நீதிபதி
ஏசுவைச்சிலுவையில் அறையும்படித் தீர்ப்பு அளித்தது பற்றியோ ஒரு குறிப்புகூட
எழுதப்படவில்லை.
அந்த காலத்தில் யூதர்களை ரோமானியர்கள்
ஆண்டனர்,கிரேக்கர்கள் கல்வி கற்று தந்தனர்.அவர்களும் யூதர்கள் பற்றி நிறைய
எழுதியிருக்கிறார்கள்.ஆனால் ஏசுவைப்பற்றியோ கிறிஸ்தவ மதம் பற்றியோ எதுவும்
குறிப்பிடப்படவில்லை.
இன்னொரு பிரச்சினை என்வென்றால் புதிய
ஏற்பாட்டில் காணப்படுகின்ற கருத்துக்களும் உபதேசங்களும் கொள்கைகளும்
ஏசுபிறப்பதற்கு முன்பிருந்தே பல்வேறு இடங்களிலிருந்து திரட்டப்பட்டு
யூதர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஹிலேல் போன்ற ராபிக்கள் பிரச்சாரம் செய்திருந்தனர்.
இதையெல்லாம் சொல்வது அறிஞர்கள், அதை ஞாபகம்
வைத்துக்கொள்.சிறிதும் யோசிக்காமல் அவர்கள் கண்களை மூடிக்கொண்டு பிற
மதங்களை பற்றி இவ்வாறெல்லாம் சொல்லி விடலாம். ஆனால் சொந்த மதத்தை பற்றி
இப்படி சொன்னால் அவர்களுது பெயர் நிலைக்குமா? எனவே அந்த விஷியத்தில் சற்று
அடக்கித்தான் வாசிப்பார்கள். இப்படி செய்வதுதான் ‘
Higher Criticism ‘ உயர்தர விமர்சனம்..
—சுவாமி விவேகானந்தா (ஞான தீபம், 8. 385-386)
Subscribe to:
Posts (Atom)