Showing posts with label தியானம். Show all posts
Showing posts with label தியானம். Show all posts

Friday, 15 March 2013

7 சக்கரங்கள்

ஆண்களுக்கு மூத்திரத்துவாரத்துக்கும் மலத்துவாரத்துக்கும் உள்ள இடைவெளியிலும், பெண்களுக்கு பெண்குறியின் உட்புறம் கருப்பைவாசல் அருகிலும் மூலாதாரச்சக்கரமானது அமைந்துள்ளது.

மூலாதாரச்சக்கரத்திற்கு சற்று ஏற்புறமாக,சுமார் நான்கு விரல் மேலே சுவாதிஷ்டானம் உள்ளது.

மூன்றாவது சக்கரமான ம்ணிபூரகம் நாபியின் பின்னே முதுகுத்தண்டில் அமைந்துள்ளது.

இதன் பின்னால் இதயத்துக்கு நேர் பின்புறம் முதுகுத்தண்டில் அநாகத சக்கரமானது அமைந்துள்ளது.

விசுக்தி சக்கரம் மைய கழுத்துக்குப் பின்னால் அதே முதுகுத்தண்டில் அமைந்துள்ளது.

ஆக்ஞை சக்கரம் முதுகுத்தண்டின் உச்சியில், இரு புருவங்களுக்கும் இடையே நேர் பின்புறம் அமைந்துள்ளது.

கடைசியில் சகஸ்ரதளமானது தலையின் மேற்புறம் கவிழ்ந்த நிலையில் ஆயிரம் இதழ்களுடன் காணப்படுகிறது.

மேலும்
மூலாதாரமானது நிலத்துடனும்,
சுவாதிஷ்டானம் நீருடனும்,
மணிபூரகம் காற்றுடனும்,
அநாகதம் நெருப்புடனும்,
விசுக்தி ஆகாயத்துடனும் தொடர்பு கொண்டுள்ளன.


இந்த ஏழு சக்கரங்களும்  நலமாக இயங்கும்வரை உடல் நலமுடன் இயங்கும் என்றும், இவற்றில்  ஏதும் தடைகள், தேக்கங்கள் உன்டானால் பொது உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும்.  இந்த பாதிப்புகளை இலகுவாக நிவர்தி செய்யவே முத்திரைகள்  பயன்படுகின்றன. இந்த முக்கிய சக்கரங்கள் நமது விரல்களால் கட்டுபடுத்தப்படுகிறது என்று தன்வந்திரி கூருகின்றார்.
1. மோதிரவிரல் - மூலாதாரம்
2. சுண்டுவிரல் - சுவாதிஷ்டானம்
3. கட்டைவிரல் - மணிபூரகம்
4. சுட்டுவிரல் - அநாகதம்
5. நடுவிரல் - விசுக்தி



சக்கரம்_______தொடர்பு__சப்தம் __கட்டுபடுத்தும் விரல்__அமைந்துள்ள இடம்

1. மூலாதாரம் --------- நிலம் -------வம்ம்ம் -- மோதிரவிரல்--------------மலத்துவாரத்துக்கும் அருகில்
  
2. சுவாதிஷ்டானம் - -நீர் -----------லம்ம்ம் ---சுண்டுவிரல்----------------மூலாதாரத்திற்கு நான்கு விரல் மேலே

3.  மணிபூரகம்-----------காற்று -----ரம்ம்ம் ----கட்டைவிரல்---------------நாபியின் பின்னே முதுகுத்தண்டில்

4. அநாகதம்---------------நெருப்பு --யம்மம்----சுட்டுவிரல்----------இதயத்துக்கு நேர் பின்புறம் முதுகுத்தண்டில்

5. விசுக்தி-----------------ஆகாயம்---ஹ்ம்ம் ---நடுவிரல்---------மைய கழுத்துக்குப் பின்னால் முதுகுத்தண்டில்

6. ஆக்ஞை ------------------------------ ஒம்ம்ம்----------------------------இரு புருவங்களுக்கும் இடையே நேர் பின்புறம்

7. சகஸ்ரதளம்--------------------------------------------------------------------தலையின் மேற்புறம்

1
 
 2
  
3
 
4
 
5
 
6
 
7
 






மனித உடலினுள் கண்ணுக்குத் தெரியாமல் செயல்படுகின்ற ஏழு சக்கரங்கள், உடலிலுள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டினையும்
தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. இந்த ஏழு சக்கரங்களும்
உடலின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஏழு சக்கரங்களையும் அவை கட்டுப்படுத்தும் உறுப்புகளைப்பற்றியும் தெரிந்து கொள்வோம்


மூலாதாரம்

முதுகெலும்பின்அடிப்பாகத்தில் அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம்.உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்திஆகிறது. உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால்மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது.

சிறுநீரகங்களுக்கு மேலுள்ளஅட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில்இருக்கின்றன.சிறுநீரகங்கள்,சிறுநீர்ப்பை,முள்ளந்தண்டுஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம்தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது
The Seven Chakras Aid0174
ஸ்வாதிஷ்டானம்

இதுபாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே
அமைந்திருக்கிறது. பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது.
பாலியல் சக்தியைக் கொடுப்பதிலும் பெறுவதிலும் இதற்கு முக்கிய பங்கு உண்டு.
ஈகோவிற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது. மற்றவர்களின் உணர்ச்சிப்போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களைதாண்டி அறிகின்ற சக்தி இதிலிருந்து தான் கிடைக்கிறது. பாலியல்சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள்,கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

மணிபூரகம்

சோலார்ப்ளெக்ஸஸ் என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. தொப்புளுக்கு சற்று மேலே இதுஇருக்கிறது. உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான்உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது. கட்டுக்கடங்காதஉணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது. அதனால்தான் அதிர்ச்சியோ பயஉணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து
விடுகின்றன. கணையம், என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான்
செயல்படுகிறது. இரைப்பை,கல்லீரல்,பித்தப்பை,மண்ணீரல்,ஆகியவை இதன்கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.

அனாகதம்

இதற்குஇருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம்உள்ள பகுதியில் இது இருக்கிறது. அன்பு,பாசம்,இரக்கம்,சகோதரத்துவம்,விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும்.தைமஸ்
சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல்கள்,இரத்தஓட்டம், கல்லீரல்,ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.

விசுத்தி

இதற்குகுரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களைவெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை.நம்முடைய புலன்களுக்கு அப்பால்அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான்
அறிகிறோம். தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை,மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

ஆக்ஞா சக்கரம்

இதைநெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்குமத்தியில் சற்று மேலாக அமைந்திருக்கிறது. தொலை உணர்தல் ( Telepathy ) தொலைஅறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம்,மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது. இதன் மூலம்தான் விஷயங்களை
உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மீகக்கண் திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள்.

பிட்யூட்டரி சுரப்பி இதன்
கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள்,
மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.

சகஸ்ரஹாரம்

இதற்குதாமரைச் சக்கரம் என்ற பெயரும் உண்டு. இது உச்சந்தலை பகுதியில்அமைந்திருக்கிறது. இந்தச்சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப்பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும்,நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவுபடுத்துகின்ற சக்கரம் இது. என்ன நடக்கப் போகிறது என, அல்லது எதைச் செய்யவேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான்கிடைக்கிறது. பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின்மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.



தியானம் (மெடிடேஷன்)


தூக்கத்தின் போழுது நம்மை அறியாமல நாம்தியானத்தில் ஈடுபடுகிறொம்.தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறநுகுவது.உறக்கத்தின் போழுது குறைந்தளவு தான் பிரபஞ்ச சக்தியை பெறமுடிகிறது.தியானத்தில் ஈடுபடும்போழுது அபரிதமான சக்தியை பெறமுடியும்.இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பலமடநுகு விரிவடைய செய்கிறது.நம்முடைய "ஆறாவது அறிவின்" கதவை திறக்கவும் விரிவடையவும்க் இது உதவுகிறது.தியானத்தின் மூலம் கிடைக்கபெறும் அதீதமான சக்த நம்மை சந்தொஷப்ப்டுத்தும்க்.


 நம் ஆரொக்கியத்தை அதிகரிக்கும். முழு மனநிறைவுடன் காணப்படுவொம். மேலும் பல சிகரங்களை தோடசேய்யும்.தியானம் என்பது ஒரு பயணம்.தியானத்தின்போழுது, நாம் உணரும் வகையில் நம் உடலிலிருந்து மனதிற்கு பயணிப்போம்.மனதிலிருந்து, அறிவாற்றலுக்குஅறிவாற்றலிலிருந்து நமக்குள்பின்பு அதையும்க தாண்டி
"தியானம்" பெற்கொள்ள முதலில் நம் உடல் மறுற்ம் மனம் சம்மந்தப்பட்ட சேயல்களை நிறுத்தவேண்டும் அதாவது உடல்க அசைவுகளையும் பார்ப்பது, பேசுவது, யொசிப்ப்து பொன்ற சேயல்களையும்."தியானம்" சேய்யும் முறை நாம் தேரிந்து கோள்ளலாம்.


தியானத்தின் போழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது கட்டுப்படுத்தி நம் உடலை கட்டூப்படுத்தி ஒரே இடத்தில்க அமர சேய்வது.எந்த முறையிலும்க அமர்ந்து கோள்ளலாம்.நமக்கு சௌகரியமான முறையில்.அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கோள்வது முக்கியம்.தரையில் அமர்ந்துகோண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்துகோண்டோ தியானம் மேற்கோளள்லாம்க் நமக்கு எந்த இடத்தில் அமர்ந்துகோண்டு தியானம் சேய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில்க அமர்ந்துகோண்டு தியானம் சேய்யலாம்.வசதியாக உட்கார்ந்து கோள்ளுங்கள்.கால்களை சப்பண்மிட்டுக் கோள்ளுங்கள்.இரண்டு கைகளின் விரல்களை சேர்த்துக்கோள்ளுங்கள்.


கண்களை மேதுவாக கோடுங்கள்.அமைதியான நிலையில் சகஜ நில்லைக்கு வாருங்கள்.உங்கள்க முழு உடலையும் இலக்காக்கி கோள்ளுங்கள்.மனதையும் இலக்காக்கி கோள்ளுங்கள்.கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம்.மந்திர்ங்களை ஒதும்போழுதோ அல்லது முணுமுணுக்கும் போழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது. ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும்.நம்முடைய உடல் மூள்றிலும் சகஜநிலையில் இருக்கும்போழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் சேய்யும்.மனம் மறுற்ம் அறிவு நிலைக்கு மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.மன தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்தவண்ணமே உள்ளது.


நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனதிற்குள் எழுந்தபடியே இருக்கும்.மனதை அரிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்லவேண்டுமேன்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்க தூவங்கவேன்டும்.கவனித்தால் என்பது நமக்கும் இருக்கும் இயற்கையான குணம்.இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்க தூவங்கவேண்டிம்.மூச்சு விடுவது ஒரு சேயலாக எண்ணி சேய்யக்கூடாது.காற்றை உளேள் இமூப்பதும், வேளியே விடுவதும்க நமக்கு தேரிந்து நடந்திடக்கூடாது.மூச்சுகாற்றை சுவாசிப்பதும்,வேளியனுப்புவதும் தண்னிச்சையாக நடைபேற வேண்டும்.நம்முடைய இயற்கையான சுவாசத்தை கவனித்தல் மட்டுமே போதுமானது. இதுதான் முக்கியம்.இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்க சிறந்த வழி.எண்ணங்களுக்கு பின் ஓடாதீர்கள்.கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கோடுக்காதீர்கள்.


எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கோள்ளுங்கள். சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.அப்போழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மேதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்த நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளி கீற்றை போல் திடப்படுத்திக்கோளுள்ம்.இந்நிலையில்ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது.எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார்க்.இந்த நிலையை தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது "எண்ணங்கள் அற்ற நிலை" என்றோ கூறுகிறோம்.இதுதான் தியான நிலை.இந்த நிலையில் தான்க பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும்.தியானம் அதிகமாக சேய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பேறும்.பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாக பாய துவங்கும்க்.

யோகம் - ஒரு எளிய அறிமுகம்

யோகம் என்ற சொல் வெவ்வேறு விதமான பொருளில் உபயோகப்படுத்தப் படுகிறது. பொதுவாக கர்ம யோகம், ஞான யோகம், பக்தியோகம் என்பவை கீதை முதலாக பல்வேறு சாத்திரங்களில் மிக விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றன. இது தவிர ஹட யோகம், ராஜ யோகம் என்று இன்னும் எத்தனை எத்தனையோ பதங்களில் யோகம் என்ற சொல் வருகிறதே அன்றி அது என்ன பொருளை அல்லது என்ன முறையை குறிக்கிறது என்று பெயரைக் கேட்டவுடனேயே மிகத்தெளிவாக தெரிந்து கொள்வது கடினம். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்களைக் கூட நம்மால் ஆகாது என்று இந்த யோகம் என்னும் சொல்லே சில நேரங்களில் விரட்டி விடுகிறது. இதற்கு காரணம் இந்த தெளிவின்மை தான். இதில் சிறிதளவாவது தெளிவை ஏற்படுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

யோகம் - ஒரு எளிய அறிமுகம்யோகம் என்ற சொல்லுக்கு நேரடி பொருள் என்னவெனில் “ஒன்றிணைதல்” என்பதாகும். மனிதன் இறைவனை உணர்ந்து, இறைவனுடன் ஒன்றிணைதல் என்று கொள்ளலாம். தர்மத்தை கடைப்பிடித்து, பற்றின்றி தனக்குரிய கடமைகளை சரிவர செய்து வந்து, செயல்களின் பலனை ஈசுவரனுக்கு அர்பணித்து விடுதலே கர்ம யோகம் ஆகும். “மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரைகழற்கு என் கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி ” என்று திருவாசகம் சொல்வது போல், உடலும் உள்ளமும் உருகி இறைவனை மனமார நேசித்து வணங்குவது பக்தி யோகமாகிறது. பக்தி யோகத்தில் திளைக்கும் பக்தர்கள் மற்ற கடமைகளைப் பற்றி கவலைப்படுவது இல்லை. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரை இதற்கு உதாரணமாக சொல்லலாம் - அவருக்கு தனக்கென்று எதுவும் ஈட்டுவது இல்லை - எல்லாமே ராம பக்தி தான் என்று இருந்தவர். ஞான யோகம் என்பது உபநிடதங்களில் ஆராய்ச்சி செய்து, புத்தியின் உதவியால் இறைவனைக் கண்டடைவது. ஆதி சங்கரர் இப்படிப்பட்ட ஒரு ஞான யோகி. இந்த யோகங்கள் எதுவுமே கேட்பதற்கு சுலபமாக இருந்தாலும் வாழ்வில் கடைபிடிப்பதற்கு மிகுந்த பக்குவமும் திறமையும் தேவை.

ஆன்மீகத்தில் யோகம் என்ற சொல்லை, மனிதன் தன் முயற்சிகளின் உச்சமாக அடையும் இன்ப துன்பங்கள் அற்ற விடுதலையே யோகம் என்றும், இன்னொரு விதத்தில் அந்த விடுதலை அடைவதற்கு உரிய வழியே யோகம் என்றும் இருவிதமான பொருளிலும் பயன்படுத்துவர். ஞானியர் வகுத்த பல்வேறு ஆன்மீக மார்க்கங்களில் யோகம் என்பது உடலை வருத்தி செய்யக்கூடிய பயிற்சி முறையாகவும், மனதை அடக்கி செய்யக் கூடிய பயிற்சி முறையாகவும் முக்கியமாக இரு பகுதிகளை கொண்டு விளங்குகிறது. தற்காலத்தில் பரவலாக யோகா என்பது உடல் வளக் கலையாகவும், மனவளக் கலையாகவும் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் இவை யோகத்தினால் அடையும் முதல் படி மட்டுமே - யோகம் இதைவிட பெரியதொரு நன்மைக்காக ஏற்பட்டதாகும்.

சிலருக்கு இந்த வாழ்க்கை மிகவும் பிடித்திருக்கும் - நல்ல மனைவி, மக்கள், நிறைய சொத்து, சாதனைகள் என்று இந்த வாழ்க்கை இன்பமாகத்தான் இருக்கிறது - இதில் மரணமில்லாமல் நானும் எனது சொத்து சொந்தபந்தங்களும் இருக்க வேண்டும் - அப்படியே மரணமடைந்தாலும் இதைப்போல இன்னும் நான்கைந்து பிறவிகள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று தோன்றும். ஆனால் மனித வாழ்க்கை, இன்பங்களுக்கு சரி விகிதமாக துன்பத்தையும் தருவதாக இருக்கிறது. மூப்பு, பிணி, சாவு ஆகியவை ஒவ்வொருவரையும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இன்ப துன்பங்கள் நிலையில்லை - நிலையான பேரின்பம் என்று ஒன்று இருக்குமானால் அது இந்த இன்ப துன்பங்களில் இருந்து விடுபடுவது தான். உலக இன்ப நுகர்ச்சியால் மயங்கி மாறாத இன்ப துன்ப சுழற்சியில் சிக்கும் மனிதன், தன் நுகர்ச்சிக்கு காரணமான உடலின் கண், காது முதலான அங்கங்களையும், புலன்களையும் அடக்கி, மனதையும் அடக்கி இறைவனை காண்பதே, இறைவனுடன் இணைவதே யோகத்தின் நோக்கம். அதே சமயத்தில் யோகத்தினால் மனித உடலின்/மனதின் செயல் வன்மையை - சாத்தியங்களை பல மடங்கு அதிகப்படுத்தி அதை இந்த உலக இன்பத்தை பன்மடங்கு அதிகமாக அனுபவிப்பதற்கும் உபயோகிக்க முடியும் - ஆனால் அது ஒரு பக்க விளைவு தானே தவிர அதுவே இறுதி நோக்கம் அல்ல.

சனாதன தருமம் என்னும் இந்து மதத்தினுள் இந்த உலகில் இன்பமாக வாழ்ந்து அனுபவிப்பதற்கும் வழிகள் உண்டு. இந்த இன்ப-துன்பங்கள் நிறைந்த வாழ்வை கடந்து இன்ப துன்பங்கள் அண்டாத பேரானந்த நிலைக்கு செல்வதற்கும் வழிகள் உண்டு. வாழ்வின் இறுதி தத்துவமாக இந்து மதத்தின் சைவம், சாக்தம், வைணவம், கௌமாரம் போன்ற பல்வேறு விதமான மார்க்கங்களில் வேதத்தின் வழியாக சொல்லப்படும் பொதுவான கருத்து, மனிதன் என்பவன் வெறும் உடல் மட்டுமல்ல - உடல் இயங்க காரணமாக உள்ளே ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது. அது உடலை விட்டு நீங்கினால் உடல் இயக்கமின்றி பிணமாகி விடுகிறது. ஆன்மாவே ஒவ்வொரு உடலினுள்ளும் புகுந்து அந்தந்த உயிரினமாக வாழ்ந்து இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது. உடல் கொண்டு வாழும் ஒவ்வொரு வாழ்க்கையிலும் ஆன்மா, தன் செயல்கள் மூலம் கர்ம வினையை சேகரித்து கொள்கிறது. அந்த கர்ம வினை, நல்லதாக இருந்தாலும், தீயதாக இருந்தாலும் அதற்குரிய பலனை அந்த பிறவியிலேயோ அல்லது அடுத்தடுத்த பிறவிகளிலோ அனுபவிக்கிறது என்பதாகும்.

உண்மையில் ஒவ்வொரு ஆன்மாவும் இறைத்தன்மையின் வெளிப்பாடு தான். ஆன்மா இறைவனை சார்ந்தே, இறைவனுடன் இணைந்தே இருக்கிறது (விசிஷ்டாத்வைதம், துவைதம்) அல்லது அது இறைவடிவமாகவே இருக்கிறது (அத்வைதம்) என்று வேதாந்த தத்துவங்கள் கூறுகின்றன. எப்படி குளத்தில் நீந்தும் மீன், தான் இருக்கும் நீருக்கு வெளியே ஒரு உலகம் இருப்பதை உணராமல், தன் உலகமே நீரால் ஆனது என்று நினைத்துக் கொள்ளுமோ அப்படித்தான் ஆன்மாவும் அறியாமையால் தன்னை இறைவனிடமிருந்து வேறு பட்டதாக எண்ணி மாயையில் சிக்கி வெவ்வேறு உயிரினங்களில் ஒன்றாக பிறவி எடுக்கிறது. இவ்வாறு ஆன்மா தன்னை உணராமல் இருப்பதே அறியாமை என்றும், தன்னை உணர்தலே ஞானம் என்றும் இந்து மத தத்துவங்கள் கூறுகின்றன. .

ஆன்மா இந்த அறியாமையை விட்டு தன் பிறவிகளுக்கு வெளியே இறைவனின் இருப்பை எப்போது கண்டுகொள்ளுகிறதோ அப்போதே பிறவிகளிலிருந்து விடுபட்டு விடுகிறது. தன்னை உணர்ந்த நிலையையே, அத்வைதம், யோகம், சமாதி, துரீயம், மரணமற்ற தன்மை, பரமபதம், மோக்ஷம், முக்தி என்று பல்வேறு பதங்களால் குறிக்கிறார்கள். இவை எல்லாமே மனமும் உடலும் செயலற்றுப் போய் அதன் பின் ஏற்பட்ட ஞானத்தினால் கிடைக்கும், இன்ப துன்பங்கள் அற்ற நிலையையே குறிக்கிறது. அந்த நிலையை அடைய சனாதன தருமம் பல்வேறு விதமான ஆன்மீக மார்க்கங்களையும், அந்த மார்க்கங்களில் செல்லக் கூடிய வாகனமாக பல்வேறு யோக முறைகளையும் பரிந்துரைக்கிறது. இவ்வாறு யோகம் என்பது இந்து மதத்தின் பல்வேறு ஆன்மசாதனை மார்க்கங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரங்கள், ஹட யோக ப்ரதீபிகை போன்ற யோக சாத்திர நூல்களில் யோக முறைகள் நான்கு வகைகளாக பிரிக்கப் பட்டு உள்ளன. அவையாவன, மந்திர யோகம், ஹட யோகம், லய யோகம், ராஜ யோகம். இவற்றில் ஒவ்வொரு வகையிலும் ஒரே மாதிரியான எட்டு பகுதிகள் உண்டு. அவையாவன, யமம், நியமம், ஆசனம், ப்ரதியாஹாரம், பிராணாயாமம், தாரணை, தியானம், சமாதி ஆகியவை ஆகும். இந்த எட்டு பகுதிகள் தான் அஷ்டாங்க யோகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த எட்டு பகுதிகளை வகுத்து கொடுத்தவர் பதஞ்சலி முனிவர் ஆவார். இந்த எட்டு பகுதிகளில் ஒவ்வொன்றிலும் ஒருவர் பயிற்சி செய்ய வேண்டிய அளவு, செய்து அடையும் நிலை, ஒவ்வொரு ஆன்மீக மார்க்கத்திலும் வேறுபடும். ஒவ்வொரு சீடருக்கும் அவரது தகுதிக்கு ஏற்ப மாறுபடும்.

யோகாசனம்யோகம் என்றால் பலருக்கும் உடனே ஞாபகம் வருவது யோகாசனங்கள் தான். யோகாசன பயிற்சிகளை பார்த்தே பலர் தயங்கி விலகிவிடுவர். உண்மையில் யோகம் என்பது யோகாசனம் மட்டும் அல்ல. அது எட்டு பகுதிகளில் அதுவும் ஒன்று அவ்வளவுதான். உதாரணமாக காலோ, கையோ இல்லாத ஒருவர் யோக முறைகளை செய்ய முயற்சிப்பது கடினம். கடுமையான நோய் கொண்டவர் சில பகுதிகளை செய்ய இயலாது. வயது முதிர்ந்தவரால் சில யோக முறைகளை செய்ய இயலாது. பிற ஊனங்கள் கொண்டவர்கள் அந்த ஊனத்தினால் யோக முறைகளை மேற்கொள்ள இயலாது. அப்படியானால் அவர்களெல்லாம் ஆன்ம விடுதலை அடையவே முடியாதா? அஷ்டாங்க யோகத்தில் சில பகுதிகளை பயில இயலாமல் போனால் இந்த பிறப்பு வீணா? என்றால் இல்லை! அஷ்டாங்க யோகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு நிலையை அடைந்தால் போதும். அதற்குத்தான் அவரவர்க்கு அஷ்டாங்க யோகத்தில் தகுந்த ஒரு நிலையை தெரிந்தெடுத்து கொடுத்து பயிற்றுவித்து ஆன்மீக வளர்ச்சி அடையச் செய்ய ஒரு குரு அவசியம் என்று வலியுறுத்தப் படுகிறது. ஒரு சிலருக்கு மிகக் கடுமையான உடல் பயிற்சி செய்தால்தான் புலன்களை அடக்க இயலும் - சிலருக்கு சுபாவமாகவே மிக எளிதாக அதிக உடற்பயிற்சிகள் இன்றி புலன்களை அடக்க வரும் - ஆகவே அந்தந்த மனிதருக்கு ஏற்ப அவரவருக்கான குரு ஒருவர் இருந்து வழிகாட்டுவது அவசியமாகிறது.

இதில் இன்னொரு ஆச்சரியமான கருத்தும் இருக்கிறது. அது சனாதன தருமம் நமக்கு காட்டும் பிறவிகளை கடந்த பார்வைதான். யோக வாசிஷ்டம் என்னும் நூல் இவ்வாறு சொல்கிறது, நல்ல கருமங்கள் - செயல்கள் செய்து வந்தால் அது ஒரு குணமாக ஆன்மாவில் படிந்து விடுகிறது. பாவ காரியங்கள் செய்து வந்தால் அதுவும் ஆன்மாவில் படிந்து விடுகிறது. அடுத்த அடுத்த பிறவிகளில் கர்மாவின் பலனால் இன்பமும் துன்பமும் ஏற்படுகிறது என்பது கருத்து. பிறவிகளைத் தாண்டி நம்முடன் கூட வருவது நமது குணங்களும் , புண்ணிய பாவங்களும் தான். கர்ம வாசனை என்று இதனை சொல்வர். ஒருவர் தொடர்ந்து காமத்தில் ஈடுபட்டே வந்திருந்தால் அடுத்த அடுத்த பிறவிகளில் அவரை காமத்தை நோக்கியே இட்டு செல்கிறது. யோகத்தில் ஈடுபட்டு வருபவருக்கு இயல்பாகவே அதை நோக்கி இட்டு செல்லும். உதாரணமாக, சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே சில திறமைகள் மிக அதிகமாக இருக்கும் - இதை ‘விட்ட குறை’ என்று பெரியோர் சொல்வர். அது இந்த பிறவிகள் கடந்த செயல்களின் வாசனை தான்.

இவ்வாறு ஒருவர் யோக பயிற்சிகள் செய்து சில காரணங்களால் இந்த பிறவியில் வெற்றி பெற முடியாமல் போனாலும் அடுத்தடுத்த பிறவிகளில் வெற்றி பெற முடியும். இது மரபணுவிலேயே பதியப்பட்டு விடுவது போல, ஆன்மாவின் மீது பதியப்பட்டு விடுகிறது என்பது சனாதன தருமத்தை சேர்ந்த சான்றோர்களின் வாக்கு. யோகத்தில் விடா முயற்சியுடன் ஈடுபடுவதற்கு இது ஒரு ஊக்கமாக ஆகிறது. இந்த யோக முறைகளையும், அதன் அஷ்டாங்க பிரிவுகளையும் அடுத்த பகுதியில் விளக்கமாக காண்போம்.

யோகத்துக்கு முதல் தேவையாக, அடிப்படையாக வேத, சாத்திரங்களில் பற்றும், தெய்வ நம்பிக்கையும் அவசியம். ஏனெனில், வேத சாத்திரங்கள் தர்மத்தை உபதேசிக்கின்றன. தர்மத்தை எடுத்துச் சொல்லி மனிதனுக்கு வழிகாட்டுகின்றன. தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் இல்லாத மனிதன் மிருகத்தைப் போல புலன்களின் ஊடாக இன்பத்தை தேடி அலைகிறான். தன்னுடைய சுகத்துக்காக எந்த தவறையும் செய்ய துணிந்து விடுகிறான். கோபதாபங்களாலும், தொடர்ந்த வேட்கையாலும் மனித உடல் வலுவிழக்கிறது. ஆசை, உலகப் பற்று, கோபம் ஆகியவற்றால் மனதும் வலுவிழக்கிறது. ஆக அதர்மத்தின் வழி நடக்கும் மனிதன் மனதாலும் உடலாலும் வலுவிழந்து விடுகிறான். அதனால்தான் உடலுக்கும், மனதுக்கும் அமைதி அளித்து மனிதனை தெய்வத்துக்கு அருகில் அழைத்துச் செல்லும் வகையில் தர்ம சிந்தனையும், தெய்வ நம்பிக்கையும், ஈடுபாடும், வேத சாத்திர புராணங்களில் பற்றும் வலியுறுத்தப் படுகிறது.

இந்த கட்டுரையின் முந்தைய பாகத்தில் யோகம் என்பது நான்கு பிரிவுகளாகவும், ஒவ்வொரு பிரிவிலும் எட்டு அங்கங்களை  கொண்டதாகவும் பார்த்தோம். அந்த எட்டு அங்கங்களை இந்த பகுதியில் சுருக்கமாக பார்ப்போம். அஷ்டாங்க யோக முறையில் ஐந்து பகுதிகள் - அங்கங்கள் பகிரங்கமாக அதாவது உடலை கட்டுப் படுத்துவதும், மூன்று பகுதிகள் அந்தரங்கமாக உள்ளத்தை - மனதை கட்டுப்படுத்தக் கூடிய பயிற்சியுமாக பிரித்து கூறுவர். அதாவது யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யாஹாரம் ஆகியவை பகிரங்கமாகவும் - வெளிப்படையாக உடலை கட்டுப்படுத்தவும்; தியானம், தாரணை, சமாதி ஆகியவை மனதை கட்டுப்படுத்தவும் என பிரிக்கப்படுகிறது. இவை ஒவ்வொன்றைப்பற்றியும் மிகச் சுருக்கமாக காண்போம்.

யமம் என்பது அஹிம்சை; வாய்மை; பொறாமையின்மை; மனதாலும், சொல்லாலும், செயலாலும் காமத்தை தவிர்த்தல்; இன்ப துன்பத்தில் சமபாவனை; தவம்; கருணை; உணவில் கட்டுப்பாடு; எளிமை; தூய்மை ஆகிய பத்து விதங்களாக கடைபிடிக்கப் படவேண்டியதாகும். அதேபோல் நியமம் என்பது விரதம் இருத்தல் போன்ற செயல்களால் இயற்றும் தவம்; கிடைத்ததை கொண்டு மகிழ்தல்; ஆன்மீகத்தில் ஈடுபாடு; தானம்; கடவுளை மனதார வணங்குதல்; சித்தாந்தங்களை கற்று கேட்டு தெளிவை அடைதல்; தீய வழிகளில் ஈடுபாட்டை நீக்குதல்; மனதை நல்ல வகையில் சிந்திக்க பயிற்றுதல்; குருவிடம் உபதேசம் பெற்று மந்திரங்களை உருவேற்றுதல்; தான் கொண்ட மார்க்கத்தில் சொன்னபடி யாக ஹோமங்கள் செய்தல் ஆகிய பத்து விதமான செயல்களாகும். ஒரு யோகிக்கு யமம், நியமம் ஆகியவை இரண்டு கண்களைப் போன்றவை. அவைதான் அடிப்படை. மனதும் உடலும் சுத்தமாக இருந்தால்தான் யோகத்தில் முன்னேற முடியும்.

அடுத்து மூன்றாவதாக ஆசனம் என்பது எண்ணத்தை சுத்தப்படுத்தி சரியான பாதையில் செலுத்துவதற்காக மேற்கொள்ளுவதாகும். ஆசனம் என்பது உடலை வளைத்து ஒவ்வொரு நிலையில் நிறுத்துதல் ஆகும். யோகாசனங்கள் எத்தனை இருக்கிறது தெரியுமா? உலகில் எத்தனை வகையான ஜீவராசிகள் இருக்கிறதோ அத்தனை இருக்கிறதாம். சுமார் 84, 00, 000 இருக்ககூடும் என்று சொல்லப்படுகிறது. அதில் சுமார் 1600 ஆசனங்கள் சிறந்தவை என்றும், அதிலும் பத்மாசனம் முதலான 32 ஆசனங்கள் மிகவும் உயர்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது. ஆசனப் பயிற்சியை குருவிடமிருந்தே கற்க வேண்டும். சரியானபடி பயில வில்லை என்றால் தீய விளைவுகள் ஏற்படக் கூடும்.

நான்காவதாக பிராணாயாமம் என்பது மூச்சு பயிற்சி என்பது அனைவரும் அறிந்ததே. மூச்சை உள்ளே இழுத்து (பூரகம்), உள்ளே மூச்சை நிறுத்தி (கும்பகம்), மூக்கை மூடி மற்றொரு மூக்கின் வழியாக வெளியேற்றுதல் (ரேசகம்) ஆகிய பயிற்சிகள் அடங்கியதே பிராணாயாமம். இதில் மூச்சை உள்ளே இழுத்தல், நிறுத்துதல், வெளியேற்றுதல் ஆகியவற்றுக்குரிய கால அவகாசத்தை மெதுவாக அதிகப்படுத்தி பயிற்சி செய்வர். பிராணாயாமத்தால் உடலில் நாடிகள் சுத்தம் அடைகின்றன. இதயம் வலுவடைகிறது. கப, வாத, பித்தங்களில் ஏற்படும் மாறுபாட்டை பிராணாயாமம் சரி செய்கிறது - அதனால் நோய்கள் நீங்குகின்றன. மனதும் அமைதி அடைகிறது.

பிராணாயாமம் செய்பவர் சரியான இடத்தை தேர்வு செய்தல் அவசியம். அந்த இடம் வசிக்கும் இடத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கக் கூடாது - சென்று சேர்வதற்குள் அவசரம், அமைதியின்மை, மனஅழுத்தம் ஆகியவை ஏற்படாமல் இருக்க வேண்டும். பாதுகாப்பற்ற இடமாகவோ, அதே நேரத்தில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடமாகவோ இருக்கக் கூடாது - சிந்தனை சிதறக்கூடும். பிராணாயாமம் பயிலும் யோகி மூன்று மணிநேரத்துக்கு மேல் உண்ணாமல் இருத்தல் ஆகாது - சாத்வீகமான இயற்கை உணவுகளையே உண்ண வேண்டும் - அதுவும் குறைவாக அரை வயிறு உண்ணவேண்டும் ஆகிய பல கட்டுப்பாடுகள் உள்ளன.

அஷ்டாங்க யோகத்தில் ஐந்தாவதாக ப்ரத்யாஹாரம் என்பது சுருக்கமாக இப்படி சொல்லலாம்: கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய பொறி ஐந்தினையும், பார்த்தல், கேட்டால், நுகர்தல், சுவைத்தல், தொட்டு உணர்தல் ஆகிய புலன் ஐந்தினையும் கட்டுப்படுத்துதல் ஆகும். ஆசனங்களும் பிரணாயாமமும் கைவரப் பெற்றால், பொறிகளை அடக்குவது எளிதாகும். ஓயாமல் மனதுக்கு செய்திகளை கொண்டு சென்று அலை அலையாக எண்ணங்களை ஓடச் செய்யும் பொறிகளை அவற்றின் புலன்களிலிருந்து எழுத்து பிடித்தால்தான் அடுத்த நிலையில் மனதை அடக்க முடியும்.

உதாரணமாக ஒருவர் மிகவும் ரசித்தது பாடல் ஒன்றை கேட்டுக் கொண்டிருக்கிறார். அவரை கடந்து வண்டி ஒன்று செல்கிறது. இப்போது இன்னொருவர் வந்து இங்கே வண்டி ஒன்று சென்றதை பார்த்தீர்களா? என்று கேட்கும்போது இல்லையே, பாட்டு கேட்டுக் கொண்டிருந்தேன் - கவனிக்கவில்லை என்று அவர் சொல்லக் கூடும். கண் பார்த்துக் கொண்டிருந்தாலும், மனதுக்கு செய்தி எதுவும் கிட்டவில்லை. அது போல, எல்லா புலன்களையுமே மனது செய்தி அனுப்புவதிலிருந்து தடுத்து விடவேண்டும். இது சாதாரணமாக செய்ய முடியாது என்பதால் ஒரு தெய்வ உருவத்தை மனதில் நினைத்து அதையே தியானித்து மற்ற புலன்களை மறக்க வைக்க வேண்டும்.

இப்போது நாம் பார்த்த இந்த அஷ்டாங்க யோகத்தின் ஐந்து அங்கங்களும் வெளிப்படையாக செய்யக்கூடியவை - உடலை பதப்படுத்தக் கூடியவை. இந்த ஐந்து முறைகளால் உடலின் சக்தியை அதிகப்படுத்தி, நீண்ட ஆயுள் பெற்று உலக இன்பத்தை மிகச்சிறந்த முறையில் துய்த்து இன்புறலாம் என்பது உண்மைதான். ஆனால் யோகத்தின் உச்ச கட்ட பலனான மோக்ஷத்தை, காலத்தை வென்று பிறப்பு இறப்புகள் அற்ற, நீடித்த ஆனந்த நிலையை அடைவதற்கு இவை மட்டும் போதாது. அதற்கு தர்மத்தின் வழி நடத்தல், வேத, சாத்திர, புராணங்களில் உறுதியான நம்பிக்கையும் ஈடுபாடு ஆகியவை அடிப்படையாக தேவை. அதன் பிறகு இந்த ஐந்து முறைகளை கடைபிடித்தால் மனதும் உடலும் ஒரு தயார் நிலைக்கு வரும். இதற்கு மேல், மனதை அடக்கி ஞானத்தை பெறும் பெரிய சாதனை இருக்கிறது. இதில் நம்பிக்கை கொண்டு முயற்சிப்பவரை சாதகர் என்றும், அவர் அடையும் நிலை சாதனை என்றும் முடிவில் அவர் யோகி என்றும் பெயர் பெறுகிறார்.

அஷ்டாங்க யோகத்தின் ஐந்தாவது அங்கமான ப்ரதியாஹாரத்தில் புலன்களை அடக்கியபின், தாரணை தொடங்குகிறது. ஓயாத அலையாக எழும் எண்ணங்களை ஒரு புள்ளியில் தரிக்க செய்வதே ஆறாவது பகுதியான தாரணை. அதற்கு ஏதுவாக தெய்வத்தின் படமோ, உருத்திராட்சம் போன்ற சின்னங்களையோ மனதில் நிறுத்தி அதையே சிந்திப்பதே தாரணை ஆகும். மனதை ஒருமுகப் படுத்துவதே தாரணையின் நோக்கம். தாரணையில் மனதை செலுத்துவதற்கு ஆசனங்களும் இதற்கு முன் சொல்லப்பட்ட மற்ற ஐந்து யோக முறைகளும் அவசியம்.

ஏழாவது அங்கமான தியானத்தை ஒரு தனி செயலாக சொல்வதை விட, அதை ஒரு நிலை என்று சொல்லலாம். தாரணையில் மனம் ஒருமுகப்பட்டாலும் அது ஒரு தனி செயலாக உட்கார்ந்து செய்ய வேண்டியது. தியானம் என்பது என்ன செயல் செய்து கொண்டு இருந்தாலும், உதாரணமாக நடக்கும் போதும், பிரயாணம் செய்யும்போதும், இறைவனுக்கு பூசை செய்து கொண்டிருந்தாலும், இதர வேலைகள் செய்து கொண்டிருந்தாலும்  தியானிக்க முடியும். தாரணையின் முடிவில் மனம் தன் எண்ணங்களை துறந்து மோன நிலைக்கு செல்வதே தியானம்.

இதன் அடுத்த நிலைதான் சமாதி என்கிற மனத்திற்குரிய விடுதலை. சமாதி நிலையில் மனது சுத்தமாக எண்ணங்களை துறந்து விடுகிறது. உடல் உணர்ச்சிகளை துறந்து விடுகிறது. ஆன்மா அமைதியை எட்டுகிறது. இந்த நிலையைஅடைய முடிந்த யோகியால், செய்ய முடியாத சாதனைகள் இல்லை, அவரால் இந்த உலகிலேயே நல்ல தார்மீக  முறையில் மிக அதிகமான இன்பத்தை அடைய முடியும். இவ்வுலக வாழ்வை துறந்து பிறப்பு - இறப்பு அற்ற பேரின்ப விடுதலைக்கும் முயற்சிக்க முடியும்.

எட்டு அங்கங்களைக் கொண்டு ஆன்ம விடுதலைக்கு வழி செய்யக் கூடிய நான்கு யோக முறைகளைப் (மந்திர யோகம், ஹட யோகம், லய யோகம்,  ராஜ யோகம்) பற்றி சுருக்கமாக இப்போது பார்ப்போம்.  முன் பகுதியில் சொன்னது போல், யோகத்தின் குறிக்கோள், ஆன்மா இந்த பிறவி துன்பங்களிலிருந்து விடுபட்டு, தன்னைப் பற்றிய ஞானத்தை அடைந்து ஆனந்த நிலையை அடைதல் ஆகும். இந்த முயற்சி, புலன்களை அடக்குவதில் தொடங்கி, ஞானத்தில் முடிவடைகிறது. யோக சாத்திரத்தில் ஞானத்தை பல விதமாக பிரித்து மிக விரிவாக விளக்கப் பட்டிருக்கிறது.

இனி யோக முறைகளைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம். முதலாவதான மந்திர யோகம் என்பது ஒரு அற்புதமான வழிமுறை. இந்த உலகில் பொருள்கள் எல்லாமே பருவுருவாக ஒவ்வொரு பெயர் கொண்டு இருக்கிறது - அதாவது யோகிகள் மொழியில் நாமமும், ரூபமும் கொண்டு இருக்கின்றன. இவற்றை பார்ப்பதால், பயன்படுத்துவதால் திரும்ப திரும்ப ஓயாமல் எண்ண ஓட்டங்கள் ஏற்படுகின்றன. புதிய யோசனைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆக இவற்றை ஒதுக்காமல், தரையில் விழுந்த ஒருவன் அந்த தரையையே ஊனிக்கொண்டு எழுந்திருப்பது போல், மன சலனங்களை ஏற்படுத்தும் இந்த நாமங்களையும், ரூபங்களையுமே  பயன்படுத்தி, மந்திர வடிவாக கண்டு வழிபாட்டு யோகத்தில் ஈடுபடுவதே மந்திர யோகமாகும்.

ஒரு தெய்வ மூர்த்தியை பிரதிஷ்டை செய்து, தோத்திரங்கள் சொல்லி, பூஜை ஆராதனைகள் செய்து, அந்த மூர்த்தியின் மீது மேல் நாளடைவில் அன்பை வளர்த்துக் கொண்டு, மனதை அந்த மந்திர தோத்திரங்களில் லயிக்கச் செய்வதே இந்த மந்திர யோகத்தின் வழிமுறை. மற்ற யோக முறைகளைவிட இது கொஞ்சம் இலகுவானது. ஆனால் மந்திர சித்தி (Siddhi) பெற பல வருடங்கள் ஆகும். இந்த யோகத்தில் எளிய யோகாசனங்களுடன், உடலை விட மனதை அதிகம் கரைப்பதே இந்த முறையில் நோக்கமாக இருக்கிறது. அதிலும் இந்த யோகத்தில் ஈடுபடுவது அந்த யோகி மட்டும் அல்ல - அவர் மந்திரம் சொல்லி ஆராதனை செய்யும் அந்த தெய்வமும் அவருக்கு உதவுகிறது. ஒரு பாதி யோகியின் முயற்சி என்றால், வெளிப்புறத்தில் இயற்கையிலிருந்து உபாசனையால் எழுப்பப் பட்ட தெய்வ சக்தியும் உதவுகிறது. இவ்வாறு மந்திரங்களை விடாமல் ஜபம் செய்து, தியானித்து வரும் யோகி தெய்வ அருளால் சமாதி நிலை அடைகிறார்.

அடுத்த ஹட யோகம் என்பது உடலை கொண்டு விதவிதமான வகையில் யோகப் பயிற்சிகள் செய்வதில் தொடங்குகிறது. இதில்தான் குண்டலினி என்கிற அபூர்வ சக்தியை மனித உடலில் எழுப்புவது பெரும் முயற்சியாக மேற்கொள்ளப் படுகிறது. குண்டலினி என்னும் சக்தி சிறு பாம்பு வடிவில் முதுகுத்தண்டின் முடிவில் உறங்குகிறது. இந்த சக்தியை உறக்கத்தில் இருந்து எழுப்புவதற்கு யோகிகள் பல்வேறு ஹட யோக ஆசன முறைகளை உபயோகப்படுத்துவர். ஹட யோகத்தின் மற்றொரு கருத்து, இந்த மனித உடல் ஆன்மாவின் சூக்கும சரீரத்திலிருந்தே உருவாகிறது. தூலமான இந்த உடலில் நிகழும் மாற்றங்கள் சூக்கும உடலையும் பாதிக்கும். அதனால் வெவ்வேறு ஆசன முறைகளால் உடலில் இயங்கும் வாயுக்களையும், நாடிகளையும் கட்டுப் படுத்தி, குண்டலினி சக்தியை எழுப்பலாம். அதன் மூலம் ஆன்மா விடுதலை அடையலாம் என்பதாகும்.  ஹட யோகத்திற்கு ஆரோக்கியமான உடலே அடிப்படை தகுதி. அதற்காக முதலில் உடலில் இயங்கும் வாயுக்கள், சுவாசம், நாடித்துடிப்புகள் ஆகியவற்றை சீர் படுத்த பயிற்சி மேற்கொள்ளுவர். அடிப்படையில் ஹ  என்றால் சூரியனையும், ட என்பது சந்திரனையும் குறிப்பதாக பொருள். அதாவது ஒன்று வெப்பத்தையும் இன்னொன்று குளிர்ச்சியையும், இரு எதிர் நிலைகளை குறிக்கிறது. இவற்றை ஒன்றுடன் ஒன்றை இணைத்து சமனப் படுத்தி விடுவது ஹட யோகம்.

ஹட யோகத்தின் அடுத்த நிலையே லய யோகம் ஆகும். லய யோகத்தில் உடலில் பல்வேறு உருவகங்கங்கள் எழுப்பப் படுகின்றன. அதாவது, முதல் உருவகம் உடலில் ஏழு சக்கரங்கள் இருக்கின்றன - அவை மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபுரம், அநாஹதம், விசுத்தி, ஆக்ஞா மற்றும் சகஸ்ராரம் ஆகும். இதில் மூலாதாரம் என்கிற சக்கரம் முதுகுத்தண்டின் முடிவிலும், சகஸ்ராரம் என்னும் சக்கரம் உச்சந்தலையிலும் இருக்கிறது. குண்டலினியை சக்தியாக உருவகித்து அவள் மூலாதாரத்தில் உறங்குவதாக பாவனை செய்யப் படுகிறது. சகஸ்ராரத்தில் சிவ பெருமான் வீற்றிருப்பதாக பாவனை செய்யப் படுகிறது. குண்டலினி சக்தியை மூலாதாரத்திலிருந்து எழுப்பி ஆறு சக்கரங்களை துளைத்து மேலெழுப்பி சிவத்துடன் இணைப்பதே லயயோகமாக விளங்குகிறது. இதற்கு மந்திர யோகத்தின் சில பகுதிகளும், ஹட யோக ஆசனங்களும் உபயோகப் படுத்தப் படுகின்றன. ஆனால் மந்திர யோகத்திலோ, ஹட யோகத்திலோ இருப்பது போல், உடலை முக்கியமாக கொள்ளுவதோடு அல்லாமல் மனதாலும் லய யோகத்தில் பயிற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. லய யோகத்தில் யோகிகள் ஆக்ஞா சக்கரத்தில் குண்டலினியை ஒளி வடிவமாக தரிசிப்பர். ஒளியை பிந்து என்று குறிப்பிடுவார்கள். அதே நேரத்தில் ஓங்காரமாக நாத வடிவிலும் குண்டலினி தேவியை தரிசிக்க கூடும்.

மந்திர யோகத்தில் முக்கிய பாகம் மந்திரங்களை உச்சரித்தல் - ஜபம் செய்தல் ஆகும். ஹட யோகத்தில் ப்ராணாயாமமே முக்கிய பாகமாக இருக்கிறது. லய யோகத்தில் தாரணை - புலன்களை உள்ளிழுத்து மனதை ஒருநிலைப் படுத்தலே முக்கியப் பாகமாக இருக்கிறது.

அடுத்த யோக முறை ராஜ யோகம். இந்த யோக முறையில் உடலை விட மனதிற்கே அதிக முக்கியத்துவம் வழங்கப் படுகிறது. துறவும், ஆசை, காமம், போன்றவற்றிலிருந்து விலகிய வைராக்கியமும் ராஜ யோகிக்கு அவசியம். ராஜ யோகி, உடலை விட, புத்தியால் மனதை அடக்க முயற்சிக்கிறார். தர்க்க வாதங்களை நிகழ்த்தி மனதை ஒரு நிலைப்படுத்துகிறார். உபநிடதங்கள் போன்றவற்றை கற்று, தெளிந்து, ஞானத்தை அடைகிறார். ராஜ யோகத்திலும் மற்ற எட்டு அங்கங்கள் உண்டு. ஆன்மாவை பற்றி நிகழ்த்தும் ஆராய்ச்சிக்கு விசாரம் என்று பெயர். ராஜ யோகி இந்த விசாரத்திலிருந்து, நிர்விசார  - கேள்விகள் இல்லாத நிலைக்கு, அமைதியான சமாதி நிலையை அடையும் போது, அவரது ஆன்மா பேரின்ப விடுதலை அடைந்து விடுகிறது. ராஜ யோகத்திற்கு மற்ற யோகப் பயிற்சிகளும் அவசியம்.

யோகம் என்பது ஏதோ மூச்சு பயிற்சியோ, அல்லது உடற்பயிற்சியோ மட்டும் அல்ல. அது ஒரு ஆன்மீகத் தேடலுக்கான சிறந்த வழிமுறை. யோகம் சனாதன தருமத்தின் ஆணிவேர். இந்த கட்டுரை யோகத்தின் வெவ்வேறு பெயர்களை சொல்லி அவற்றை சுருக்கமாக விளக்க மேற்கொள்ளப்பட முயற்சி மட்டுமே. யோக சாத்திரத்தின் ஒவ்வொரு யோக முறையும் கடலளவு பெரியது. சனாதன தருமத்தில் பங்கு வகிக்கும் எந்த மார்க்கத்திலும், அது முருக வழிபாடாகட்டும், அனுமனின் வழிபாடாகட்டும், சக்தி வழிபாடாகட்டும், வைணவ வழிபாடாகட்டும், எந்த வழிபாட்டிற்கும் அடிப்படையானது யோகம். இதுவே அந்தந்த இஷ்ட தெய்வங்களின் அருளை பெற்றுத்தந்து முக்தி அடைய உதவக் கூடியது. இந்த கட்டுரையை படிப்பவர்கள் மேற்கொண்டு யோகத்தில் ஆர்வம் பெற்று யோக சாதனைகள் செய்ய எல்லாம் வல்ல இறைவன் துணை இருக்கட்டும்.

யோகியின் அமைதி


நமது அறிவுக்கு எட்டாத மாபெரும் உலக நிகழ்ச்சிகளெல்லாம் உள்ளே ஆழ்ந்த, கம்பீரமான மோனத்தில் தங்களைப் பூரணப்படுத்திக் கொள்கின்றன. உள்ளே நடப்பதைத் தெரியவொட்டாத இரைச்சல் ஒலி மேற்பரப்பில் காணப்படுகிறது - மேலே சலசலக்கும் எண்ணற்ற அலைகள், கீழே ஆழங்காண முடியாத மாகடலின் திண்மை.

மனிதன் மேற்பரப்பிலுள்ள அலைகளையும் அவற்றின் குமுறலையும் ஆயிரம் ஓலங்களையும் காண்கிறான். அவற்றிலிருந்து வருங்காலத்தின் போக்கையும் இறைவனின் சித்தத்தையும் கணிக்கிறான்.

ஆனால் அவனுடைய கணிப்பு பத்தில் ஒன்பது தவறிவிடுகிறது. இதைக்கண்டுதான் மனித வரலாற்றில் எப்பொழுதும் எதிர்பாராதவைகளே நடக்கின்றன என்கிறார்கள்.

மேலெழுந்தவாரியான விஷயங்களைப் பார்க்காது விஷயங்களின் சத்தான அம்சத்தைக் காண அவர்கள் கற்றுக்கொண்டால், தோற்றங்களில் கவனம் செலுத்தாது ஆழ்ந்துசென்று உள்ளே மறைந்து கிடக்கும் உண்மையைக் காணும் பயிற்சிபெற்றல், வாழ்க்கையின் இரைச்சலுக்கு செவிசாய்க்காது அதன் மோனத்திற்கு செவிசாய்த்தல் அவை எதிர்பாராதவைகளாக இரா.

செயல்படுவதற்கு நாம் கடும் முயற்சி எடுக்கும்போது இயற்கை சக்திகள் தங்கள் விருப்பம்போல் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. நாம் அசைவற்ற மோன நிலையில் இருக்கும்போது அவை நமக்கு அடங்கி நிற்கின்றன. இது ஒரு இயற்கை விதி.

ஆனால் அசைவற்ற நிலையில் இருவகை உண்டு. உயிரற்ற மந்தச் சோம்பலிலிருந்து, தமோ குணத்திலிருநூது தோன்றுகிற, எதையும் செய்ய திறனில்லாத அசைவற்ற நிலை ஒன்று. அது அழிவுக்கு முன்னோடி. மற்றது அனைத்தையும் வெல்லும் ஆற்றலுடன் கூடிய அசைவற்ற நிலை. அதிலிருந்து பூரண வாழ்வு மலரும்.

யோகியின் அமைதி அனைத்தையும் வெல்லும் இந்த மோனமே. அமைதி பூரணமடைவதற்கேற்றபடி யோக சக்தியும் அதிகரிக்கும், செயலாற்றலும் அதிகரிக்கும்.

இந்த அமைதியிலேதான் உண்மையான ஞானம் தோன்றும். மனிதனின் சிந்தனை மெய்யும் பொய்யும் பின்னிய ஒன்று. மெய்ப்பார்வையின் மீது பொய்ப்பார்வையின் இருள் படிகின்றது; சரியான அளவிடுதலை தவறான அளவிடுதல் முடமாக்குகின்றது. சரியான ஞாபகத்தை தவறான ஞாபகம் ஏமாற்றுகின்றது.

மனத்தின் சலித்தல் நிற்கவேண்டும், சித்த சுத்தி ஏற்படவேண்டும். அப்பொழுது அலைபாயும் பிரகிருதி மீது ஒரு மோனம் இறங்குகின்றது. அந்த மோன அமைதியில் மனத்தில் ஞானோதயம் உண்டாகிறது. தவறு விலகத் தொடங்குகிறது.

மீண்டும் ஆசை துளிர்க்காவிடில், உணர்வின் மேல் மட்டத்தில் ஞானத் தெளிவு நிலைபெற்றுவிடும். அதன் ஆற்றலால் கீழ்மட்டத்தில் அமைதியும் இன்பமும் நிலவும். சரியான ஞானத்திலிருந்து பிழைபடாத சரியான செயல் எழும் - "யோகே கம்மேச கெளசலம்" - யோகம் செயல்களில் சிறந்தது.

யோகியின் ஞானம் சாதாரண ஆசைவயப்பட்ட மனத்தின் ஞானம் அன்று. அது அறிவியல் ஞானமோ உலகியல் ஞானமோ அல்ல. இவை மேற்பரப்பில் காணும் தூய மெய்மைகளின் (Facts) அடிப்படையிலும் முன் அனுபவங்களின் மீதும் நிற்பவை. இறைவனின் செயல்முறைகளை யோகி அறிவான்.

நாம் எதிர்பாராதவை அடிக்கடி நிகழ்கின்றன, தூல உண்மைகள் ஏமாற்றிவிடும் என்பதை அவன் உணர்ந்துள்ளான். அவன் பகுத்தறியும் மனத்திற்கு மேலே உள்ள நேரடியான ஒளிபெற்ற ஞானமாகிய விஞ்ஞானத்தை அடைகிறான்.

ஆவை வயப்பட்ட மனம் நன்மை தீமை, இன்பம் இன்பம், சுகம் துக்கம் என்னும் வலையில் சிக்கியுள்ளது. நன்மையானவை, இலாபமானவை நேர்ந்தால் பூரித்துப் போகிறது. அவற்றிற்கு எதிரிடையானவை நேர்ந்தால் குழம்பித் தவிக்கிறது.

ஆனால் யோகியின் ஞானக்கண் எல்லாம் நன்மையை நோக்கியே செல்கின்றன என்பதைக் காண்கிறது. எல்லாம் கடவுள்மயம், கடவுள் சர்வமங்களமானவன், பின் வேறெப்படி இருக்க முடியும்? தீமைபோல் தோன்றுவது நன்மைக்குக் குறுக்குப் பாதை என்பதும், இன்பத்தை உண்டாக்க துன்பம் இன்றியமையாதது என்பதும் துரதிஷ்டமானவை மூலமே அதிக பூரணமான சுகம் கிடைக்கும் என்பதும் அவனுக்குத் தெரியும். துவந்தங்களின் அடிமைத் தளையிலிருந்து அவனுடைய புத்தி விடுதலை பெற்றுவிட்டது.

ஆதலால் யோகியின் செயல் சாதாரண மனிதனின் செயலைப்போல் இராது. அவன் தீமைக்குப் பணிந்து போவதுபோலும், பிறர் துன்பங்களைத் துடைக்க முன்வராததுபோலும், ஹிம்சையையும் கொடுமையையும் எதிர்த்து நிற்கும் நல்லோர் முயற்சிக்கு ஆதரவு மறுப்பதுபோலும் தோன்றும். அவன் செயல் பேயன் செயலைப்போல தோன்றும். அல்லது, செயல் வேண்டுவதுபோல் தோன்றும் சமயங்களில் அவன் செயல்படாதிருப்பதையும், குரல் எழுப்பவேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கும்போது மெளமாக இருப்பதையும் வெறிகொள்ளச்செய்யும் சம்பவங்கள் நடக்கும்போது எவ்வித உணர்ச்சியும் கட்டாதிருப்பதையும் காணும் மக்கள் அவனை வெறும் ஐடம் என்று கருதலாம். அவன் செய்யும் காரியங்களில் அவற்றிற்கு ஒரு குறியோ இலட்சியமோ இருப்பதாகத் தெரியாது. ஆகவே மக்கள் அவனை பைத்தியக்காரன் என்றும் மடையன் என்றும் இகழ்வார்கள்.

பிறருக்கு அல்லாத ஒரு ஒளியை - ஒரு வேளை அவர்கள் அதை இருள் என்றுகூடச் சொல்லலாம் - யோகி பின்பற்றிச் செல்கிறான். அவர்களுக்கு வெறும் கனவாக இருப்பது அவனுக்கு மெய்யாக இருக்கிறது, அவர்களுக்கு இரவாக இருப்பது அவனுக்குப் பகலாக இருக்கிறது. இந்த மாறுபாடுகளுக்கெல்லாம் மூல காரணம் அவர்கள் பகுத்தறிவு கொண்டு ஆராய்கிறார்கள், அவன் உண்மையை நேரே அறிகிறான்.

மோனம், அசைவற்ற நிலை (Stillness), ஒளிபொருந்திய செயலின்மை இவற்றைப் பெறுவது அமர நிலைக்குத் தகுதிச் சான்று பெறுவதாகும். அது தமோகுணத்தில் அழுந்தி மண்ணாங்கட்டிபோல் ஆகிவிடுதல் அன்று. அது தீரன் ஆவதாகும். அதுவே மநது பழம்பெரும் நாகரிகத்தின் இலட்சியம்.

தமோகுணத்தவனது செயலற்ற நிலை அவனைச் சுற்றிலும் செயல்படும் சக்திகளுக்குத் தடைக் கல்லாகும்; ஆனால் யோகியின் செயலின்மை படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் புரியம். அவனுடைய செயல் மாபெரும் இயற்கைச் சக்திகளின் மகா செயல்வேகத்தைப் போல் நேரடியாக வேலை செய்வது, செயல் வீறு கொண்டது.

பெரும்பாலும் இந்த அசைவற்ற நிலை உள்ளே இருக்க, வெளியே பேச்சும் செயலும் சலசலக்கும் - ஆழ்கடலின் மேற்பரப்பில் அலைகள் கும்மாளமிடுவதுபோல். ஆனால் உலகின் மேற்பரப்பிலுள்ள இரைச்சலிலும் நடந்து மறைந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளுக்கும் கீழே மறைந்திருக்கும் இறைவனின் செயல்களின் உண்மையை மக்கள் எவ்வாறு கண்டுகொள்வதில்லையே அவ்வாறே யோகியின் செயலையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது.

இரைச்சலின் பலமும் செயல்பாட்டின் (activity) பலமும் பெரிது என்பதில் சந்தேகமில்லை - இரைச்சலின் பலத்தால் ஜெரிகோவின் சுவர்கள் விழவில்லையா? ஆனால் செயலற்ற நிலையினுடைய சக்தியும், மோனத்தினுடைய சக்தியும் எல்லையற்றது, அவற்றில் மாபெரும் சக்திகள் செயலுக்கு ஆயத்தமாகின்றன. 

நமது அறிவுக்கு எட்டாத மாபெரும் உலக நிகழ்ச்சிகளெல்லாம் உள்ளே ஆழ்ந்த, கம்பீரமான மோனத்தில் தங்களைப் பூரணப்படுத்திக் கொள்கின்றன. உள்ளே நடப்பதைத் தெரியவொட்டாத இரைச்சல் ஒலி மேற்பரப்பில் காணப்படுகிறது - மேலே சலசலக்கும் எண்ணற்ற அலைகள், கீழே ஆழங்காண முடியாத மாகடலின் திண்மை. மனிதன் மேற்பரப்பிலுள்ள அலைகளையும் அவற்றின் குமுறலையும் ஆயிரம் ஓலங்களையும் காண்கிறான்.

அவற்றிலிருந்து வருங்காலத்தின் போக்கையும் இறைவனின் சித்தத்தையும் கணிக்கிறான். ஆனால் அவனுடைய கணிப்பு பத்தில் ஒன்பது தவறிவிடுகிறது. இதைக்கண்டுதான் மனித வரலாற்றில் எப்பொழுதும் எதிர்பாராதவைகளே நடக்கின்றன என்கிறார்கள். மேலெழுந்தவாரியான விஷயங்களைப் பார்க்காது விஷயங்களின் சத்தான அம்சத்தைக் காண அவர்கள் கற்றுக்கொண்டால், தோற்றங்களில் கவனம் செலுத்தாது ஆழ்ந்துசென்று உள்ளே மறைந்து கிடக்கும் உண்மையைக் காணும் பயிற்சிபெற்றல், வாழ்க்கையின் இரைச்சலுக்கு செவிசாய்க்காது அதன் மோனத்திற்கு செவிசாய்த்தல் அவை எதிர்பாராதவைகளாக இரா. செயல்படுவதற்கு நாம் கடும் முயற்சி எடுக்கும்போது இயற்கை சக்திகள் தங்கள் விருப்பம்போல் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. நாம் அசைவற்ற மோன நிலையில் இருக்கும்போது அவை நமக்கு அடங்கி நிற்கின்றன. இது ஒரு இயற்கை விதி. ஆனால் அசைவற்ற நிலையில் இருவகை உண்டு.

உயிரற்ற மந்தச் சோம்பலிலிருந்து, தமோ குணத்திலிருநூது தோன்றுகிற, எதையும் செய்ய திறனில்லாத அசைவற்ற நிலை ஒன்று. அது அழிவுக்கு முன்னோடி. மற்றது அனைத்தையும் வெல்லும் ஆற்றலுடன் கூடிய அசைவற்ற நிலை. அதிலிருந்து பூரண வாழ்வு மலரும். யோகியின் அமைதி அனைத்தையும் வெல்லும் இந்த மோனமே. அமைதி பூரணமடைவதற்கேற்றபடி யோக சக்தியும் அதிகரிக்கும், செயலாற்றலும் அதிகரிக்கும். இந்த அமைதியிலேதான் உண்மையான ஞானம் தோன்றும். மனிதனின் சிந்தனை மெய்யும் பொய்யும் பின்னிய ஒன்று. மெய்ப்பார்வையின் மீது பொய்ப்பார்வையின் இருள் படிகின்றது; சரியான அளவிடுதலை தவறான அளவிடுதல் முடமாக்குகின்றது. சரியான ஞாபகத்தை தவறான ஞாபகம் ஏமாற்றுகின்றது. மனத்தின் சலித்தல் நிற்கவேண்டும், சித்த சுத்தி ஏற்படவேண்டும். அப்பொழுது அலைபாயும் பிரகிருதி மீது ஒரு மோனம் இறங்குகின்றது. அந்த மோன அமைதியில் மனத்தில் ஞானோதயம் உண்டாகிறது. தவறு விலகத் தொடங்குகிறது.

மீண்டும் ஆசை துளிர்க்காவிடில், உணர்வின் மேல் மட்டத்தில் ஞானத் தெளிவு நிலைபெற்றுவிடும். அதன் ஆற்றலால் கீழ்மட்டத்தில் அமைதியும் இன்பமும் நிலவும். சரியான ஞானத்திலிருந்து பிழைபடாத சரியான செயல் எழும் - "யோகே கம்மேச கெளசலம்" - யோகம் செயல்களில் சிறந்தது. யோகியின் ஞானம் சாதாரண ஆசைவயப்பட்ட மனத்தின் ஞானம் அன்று. அது அறிவியல் ஞானமோ உலகியல் ஞானமோ அல்ல. இவை மேற்பரப்பில் காணும் தூய மெய்மைகளின் (Facts) அடிப்படையிலும் முன் அனுபவங்களின் மீதும் நிற்பவை. இறைவனின் செயல்முறைகளை யோகி அறிவான். நாம் எதிர்பாராதவை அடிக்கடி நிகழ்கின்றன, தூல உண்மைகள் ஏமாற்றிவிடும் என்பதை அவன் உணர்ந்துள்ளான். அவன் பகுத்தறியும் மனத்திற்கு மேலே உள்ள நேரடியான ஒளிபெற்ற ஞானமாகிய விஞ்ஞானத்தை அடைகிறான். ஆவை வயப்பட்ட மனம் நன்மை தீமை, இன்பம் இன்பம், சுகம் துக்கம் என்னும் வலையில் சிக்கியுள்ளது. நன்மையானவை, இலாபமானவை நேர்ந்தால் பூரித்துப் போகிறது.

அவற்றிற்கு எதிரிடையானவை நேர்ந்தால் குழம்பித் தவிக்கிறது. ஆனால் யோகியின் ஞானக்கண் எல்லாம் நன்மையை நோக்கியே செல்கின்றன என்பதைக் காண்கிறது. எல்லாம் கடவுள்மயம், கடவுள் சர்வமங்களமானவன், பின் வேறெப்படி இருக்க முடியும்? தீமைபோல் தோன்றுவது நன்மைக்குக் குறுக்குப் பாதை என்பதும், இன்பத்தை உண்டாக்க துன்பம் இன்றியமையாதது என்பதும் துரதிஷ்டமானவை மூலமே அதிக பூரணமான சுகம் கிடைக்கும் என்பதும் அவனுக்குத் தெரியும். துவந்தங்களின் அடிமைத் தளையிலிருந்து அவனுடைய புத்தி விடுதலை பெற்றுவிட்டது. ஆதலால் யோகியின் செயல் சாதாரண மனிதனின் செயலைப்போல் இராது. அவன் தீமைக்குப் பணிந்து போவதுபோலும், பிறர் துன்பங்களைத் துடைக்க முன்வராததுபோலும், ஹிம்சையையும் கொடுமையையும் எதிர்த்து நிற்கும் நல்லோர் முயற்சிக்கு ஆதரவு மறுப்பதுபோலும் தோன்றும்.

அவன் செயல் பேயன் செயலைப்போல தோன்றும். அல்லது, செயல் வேண்டுவதுபோல் தோன்றும் சமயங்களில் அவன் செயல்படாதிருப்பதையும், குரல் எழுப்பவேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கும்போது மெளமாக இருப்பதையும் வெறிகொள்ளச்செய்யும் சம்பவங்கள் நடக்கும்போது எவ்வித உணர்ச்சியும் கட்டாதிருப்பதையும் காணும் மக்கள் அவனை வெறும் ஐடம் என்று கருதலாம். அவன் செய்யும் காரியங்களில் அவற்றிற்கு ஒரு குறியோ இலட்சியமோ இருப்பதாகத் தெரியாது. ஆகவே மக்கள் அவனை பைத்தியக்காரன் என்றும் மடையன் என்றும் இகழ்வார்கள். பிறருக்கு அல்லாத ஒரு ஒளியை - ஒரு வேளை அவர்கள் அதை இருள் என்றுகூடச் சொல்லலாம் - யோகி பின்பற்றிச் செல்கிறான்.

அவர்களுக்கு வெறும் கனவாக இருப்பது அவனுக்கு மெய்யாக இருக்கிறது, அவர்களுக்கு இரவாக இருப்பது அவனுக்குப் பகலாக இருக்கிறது. இந்த மாறுபாடுகளுக்கெல்லாம் மூல காரணம் அவர்கள் பகுத்தறிவு கொண்டு ஆராய்கிறார்கள், அவன் உண்மையை நேரே அறிகிறான். மோனம், அசைவற்ற நிலை (Stillness), ஒளிபொருந்திய செயலின்மை இவற்றைப் பெறுவது அமர நிலைக்குத் தகுதிச் சான்று பெறுவதாகும். அது தமோகுணத்தில் அழுந்தி மண்ணாங்கட்டிபோல் ஆகிவிடுதல் அன்று. அது தீரன் ஆவதாகும். அதுவே மநது பழம்பெரும் நாகரிகத்தின் இலட்சியம். தமோகுணத்தவனது செயலற்ற நிலை அவனைச் சுற்றிலும் செயல்படும் சக்திகளுக்குத் தடைக் கல்லாகும்; ஆனால் யோகியின் செயலின்மை படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் புரியம். அவனுடைய செயல் மாபெரும் இயற்கைச் சக்திகளின் மகா செயல்வேகத்தைப் போல் நேரடியாக வேலை செய்வது, செயல் வீறு கொண்டது.


பெரும்பாலும் இந்த அசைவற்ற நிலை உள்ளே இருக்க, வெளியே பேச்சும் செயலும் சலசலக்கும் - ஆழ்கடலின் மேற்பரப்பில் அலைகள் கும்மாளமிடுவதுபோல். ஆனால் உலகின் மேற்பரப்பிலுள்ள இரைச்சலிலும் நடந்து மறைந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளுக்கும் கீழே மறைந்திருக்கும் இறைவனின் செயல்களின் உண்மையை மக்கள் எவ்வாறு கண்டுகொள்வதில்லையே அவ்வாறே யோகியின் செயலையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. இரைச்சலின் பலமும் செயல்பாட்டின் (activity) பலமும் பெரிது என்பதில் சந்தேகமில்லை - இரைச்சலின் பலத்தால் ஜெரிகோவின் சுவர்கள் விழவில்லையா? ஆனால் செயலற்ற நிலையினுடைய சக்தியும், மோனத்தினுடைய சக்தியும் எல்லையற்றது, அவற்றில் மாபெரும் சக்திகள் செயலுக்கு ஆயத்தமாகின்றன.