Wednesday, 15 May 2013

சாதி ஏற்பாட்டின் உட்கருத்து…


ஐரோப்பிய நாகரிகத்திற்குரிய வழிமுறை பலத்காரம் ஆகும். ஆரிய நாகரிகமோ வர்ண தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த வர்ணப் பிரிவினை நாகரிகம் என்னும் உச்சிக்கு மக்களை அழைத்துச் செல்லும் படிக்கட்டாகும். ஒருவனுடைய கல்வியும், அறிவு பயற்சியும் அதிகமாக ஆக அவன் அந்தப் படிக்கட்டின் மூலமாக மேலே மேலே ஏறிக்கொண்டிருக்கிறான்.ஐரோப்பிய நாகரிகத்தில் பலசாலிகளுக்கே வெற்றி; பலவீனர்கள் அழிந்து போக வேண்டியது தான். ஆனால் பாரத நாட்டிலோ ஒவ்வொரு சமூக விதியும் பலவீனர்களைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டதாகும்.

 சாதி என்பது நல்ல ஏற்பாடுகள். ஆனால் உண்மையில் சாதி என்றால் என்ன என்று லட்சத்தில் ஒருவர் கூட அறிந்து கொள்வதில்லை. உலகில் சாதி இல்லாத நாடே இல்லை. இந்தியாவில் நாம் சாதி என்னும் கிழ்ப்படியில் தொடங்கி சாதியற்ற மேல் நிலையை அடைகிறோம். சாதி என்பது இந்த தத்துவத்தை அடிப்படையாக கொண்டது ஆகும். இந்தியாவில், பிராமணன் மனித குலத்தின் இலக்கியமாவான்.ஒவ்வொருவனையும் பிராமணன் ஆக்குவது சாதி ஏற்பாட்டின் நோக்கமாகும். இந்திய வரலாற்றை படித்தால் கீழ் வகுப்பாரை மேலே கொண்டுவர எப்போதும் முயற்சிகள் செய்யப்பட்டு வந்திருப்பதை காண்பீர்கள். பல வகுப்புகள் கைதூக்கி விடப்ப்படிருகின்றன. மற்றும் பல வகுப்புகளும் மேலே வந்து முடிவில் எல்லோரும் பிராமணர்கள் ஆவார்கள். இதுவே சாதி ஏற்பாட்டின் நோக்கமாகும். யாரையும் கீழே கொண்டுவரமால் எல்லோரையும் மேலே தூக்கிவிட வேண்டும். இதைப் பெரிதும் பிராமணர்களே செய்தாக வேண்டும். எல்லா உரிமை பெற்ற கூட்டங்களும் தங்களுக்குத் தாங்களே குழி வெட்டிக் கொள்கிறார்கள். ஆகையால் மற்றவர்களையும் தங்களுக்குச் சமமாக உயர்த்தலே அவர்கள் கடமை ஆகும்.
sv16[1]


சாதி நல்லது; உரிமைதான் தீயது.
 சாதி என்பது நல்ல ஏற்பாடே. சமூக வாழ்க்கையை ஒழுங்கப்படுத்துவதற்கு அது ஒன்றே இயற்கை வழி. எந்த சமூகத்திலும் மனிதர்கள் தனித்தனிக் குழுவாகச் சேர்ந்தே ஆகவேண்டும். இந்த இயற்கை நியதியை மாற்ற முடியாது. நீங்கள் எங்கே போனாலும் சாதி இருப்பதைக் காணலாம்.சாதி அடியோடு போகவேண்டியது இல்லை. அதை அடிக்கடி சீர்திருத்தி அமைத்தலே அவசியம் ஆகும்.சாதியை அடியோடு ஒழிக்க விரும்புதல் அறிவீனமாகும்.

 நம்மை ஒரு தனிச்சமூகமாகக் காப்ற்றுவதற்கு இந்த ஏற்பாடுகள் அவசியமாக இருந்திருக்கின்றன. தற்காப்புக்கு இந்த அவசியம் இல்லாமல் போகும் போது அவை இயற்கை மரணம் அடையும். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள சாதி ஏற்பாட்டைக் காட்டிலும் இந்திய சாதி ஏற்பாடு சிறந்ததாகும். அது முற்றிலும் நல்லது என்று நான் சொல்லவில்லை. சாதி இல்லாவிட்டால் இப்போது உங்கள் கதி என்னவாக இருக்கும்? உங்கள் கல்வியும், பிறவும் என்ன கதி அடைந்திருக்கும்?

 தனி வகுப்புகளாகப் பிரிந்தமைதல் சமூகத்தின் இயற்கை. விசேஷ உரிமைகளே தொலைதல் வேண்டும்.சாதி என்பது ஓர் இயற்கை நியதி. சமூக வாழ்வில் நான் ஒரு கடமையை செய்கிறேன்; நீ மற்றொரு கடமையை செய்கிறாய். நீ நாட்டை ஆள்கிறாய்; நான் பழைய செருப்பு தைக்கிறேன். இதனாலேயே நீ என்னைவிட பெரியவனாவது எவ்வாறு? நான் நாடாள முடியாதெனில் நீ செருப்பு தைக்க முடியுமா? நான் செருப்பு தைப்பதில்  திறமையானவன்; நீ வேதம் ஓதுவதில் திறமையானவன்; அதனால் நீ என் தலை மீதேறி மிதிக்க வேண்டும் என்பது என்ன?

ஆண்டவன் மனித குலத்திற்கு அளித்த மிகச் சிறந்த சமூக அமைப்புகளில் சாதி ஏற்பாடு ஒன்று என்பதாக நாங்கள் நம்புகிறோம். விலக்க முடியாத பல குறைபாடுகளும், அந்நிய நாட்டவரின் கொடுமைகளும் எல்லாவற்றிற்கும் மேலாக பிராமணர் என்னும் பெயருக்கு தகுதியற்ற பிராமணர் பலரின் மகத்தான அஞ்ஞானமும் கர்வமும், அந்த உரிய அமைப்பானது உரிய பயனனியா வண்ணம் செய்திருக்கின்றன. அவ்வாறு இருப்பினும், அந்த அமைப்பினால் பாரத நாட்டுக்கு ஆச்சரியகரமான நன்மைகள் விளைதிருகின்றன என்றும், இனியும் இந்திய சமூகத்தை அதன் இலட்சியத்துக்கு கொண்டு சேர்க்க போவது அந்த அமைப்பே என்று நாங்கள் நம்புகிறோம்..

 தற்கால சாதி வேற்றுமையானது இந்தியாவின் முன்னேற்றத்துக்கு ஒரு தடைக்கல்லாகும். அது வாழ்வை குறுக்குகின்றது; கட்டுப்படுத்துக்கின்றது; பிரிவினை செய்கின்றது. அறிவு வெள்ளத்தின் முன்பாக அது விழுந்து மாயும்.
 தற்போதைய  அரசாங்கத்தின்கீழ், எவனும் தன் வாழ்விற்காக எந்த தொழிலும் செய்யலாம். தடை எதுவும் கிடையாது. எனவே வாழ்க்கை போட்டி வலிமையாகிவிட்டது. இதன் பயனாக ஆயிரக்கணக்கானவர்கள் அடியில் கிடந்து உழலாமால், தங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் பயன்படுத்தி மேல் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

 –சுவாமி விவேகானந்தர் …..

No comments:

Post a Comment