கடவுளை அறிய முடியாது என்று ஆஜ்ஞயவாதிகள்
சொல்கின்றனர். அதுவும் சரிதான். ஏனெனில் புலன்களால் இயன்றவரை அவர்கள்
முயன்றுவிட்டார்கள். ஆனால் ஏதும் நடக்கவில்லை.
ஆகையால் மதத்தையும், அதாவது கடவுள்
இருக்கிறார் என்பதையும், மரணமிலாப் பெருவாழ்வையும், இது போன்றவற்றையும்
நிருபிப்பத்ற்குப் புலனறிவை கடந்து செல்ல வேண்டும். பெரிய
தீர்க்கதரிசிகளும் மகான்களும் தாங்கள் ‘கடவுளைப் பார்த்திருப்பதாகச்’
சொல்கிறார்கள். அதாவது அவர்களுக்கு நேரடி அனுபவம் கிடைத்திருகிறது. அனுபவம்
இல்லமால் அறிவு இல்லை. ஆதலால் மனிதன் தனது ஆன்மாவில் கடவுளை காண
வேண்டும்.பிரபஞ்சத்தின் அந்த மகத்தான ஒரே உண்மையை நேருக்குநேராக கண்ட
பிறகுதான் சந்தேகங்கள் எல்லாம் நீங்கும், குழப்பங்கள் எல்லாம் தெளிவாகும்.
இது தான் ‘கடவுளை பார்ப்பது’ என்பது.
ஆன்மா ஒன்று உண்டு என்று சொல்கிறீர்கள்.
அந்த ஆன்மாவை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நமக்கெல்லாம் ஆன்மா இருந்தும்
நாம் ஏன் அதைப் பார்த்ததில்லை? இந்த கேள்விக்கு விடை அளித்தாக வேண்டும்;
ஆன்மாவைக் காண வழி கண்டாக வேண்டும். இல்லாவிட்டால் மதம் அதுஇது என்றெல்லாம்
பேசுவது பயனற்றது. ஒரு மதம் உண்மையென்றால், அது ஆன்மாவையும் ஆண்டவனையும்
உண்மையையும் நம் உள்ளத்தில் காட்ட வேண்டும். இந்த கொள்கை, அந்த கொள்கை
என்று நானும் நீங்களும் ஊழிக்கலாம்வரையில் வாதடிக்கொண்டே இருக்கலாம். ஒரு
முடிவிற்கும் வரவே மாட்டோம்.
காலங்காலமாக மக்கள் வாதிட்டுக் கொண்டுதான்
இருக்கிறார்கள். என்ன பயன்? அறிவு அங்கே போகவே முடியாது. அறிவின் எல்லைக்கு
அப்பால் நாம் போக வேண்டும். மதத்திற்கான நிரூபணம் நேரடி அனுபவம். இதோ
இந்தச் சுவர் இருப்தற்கான நிரூபணம் அதை நாம் நேரடியாகக் காண்பதுதான். சுவர்
இருக்கிறதா இல்லையா என்பதைப்பற்றி காலங்காலமாக வாதம் புரிந்தாலும், ஒரு
முடிவிற்கும் வர முடியாது; நீங்கள் நேரடியாகப் பார்த்தால் போதும், எல்லா
வாதங்களும் அடங்கிவிடும். உலகிலுள்ளோர் அனைவரும் சேர்ந்து, இந்த் சுவர்
இல்லையென்று உங்களிடம் சொன்னாலும் அதை நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஏனெனில்
உலகிலுள்ள கொள்கைகள் கோட்பாடுகள் அனைத்தையும்விட மேலான சாட்சி உங்கள்
கண்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ள
வேண்டியதில்லை. உண்மையை ஆராய வேண்டியது நமது கடமை. மற்ற விஞ்ஞானங்களை
போலவே மதத்தில் உள்ளவற்றையும் நேருக்கு நேராக காணலாம்.அதற்கு சில உண்மைகளை
சேகரிக்க வேண்டும். ஆனால் ஐம்புலன்களுக்கு கட்டுப்பட்டு இந்த அறிவுத்
தளத்தைக் கடந்து சென்றால் தான் இது முடியும்.மத உணமைகளை ஒவ்வொருவரும்
சரிபார்க்க வேண்டும். ஒரே லட்சியம் கடவுளை காண்பது தான். சக்தி பெறுவது
நமது லட்சியம் அல்ல.உண்மை-அறிவு-அன்பே லட்சியம்; அன்பே கடவுள்.
—-சுவாமி விவேகானந்தர்…..
No comments:
Post a Comment