Friday, 15 March 2013

7 சக்கரங்கள்

ஆண்களுக்கு மூத்திரத்துவாரத்துக்கும் மலத்துவாரத்துக்கும் உள்ள இடைவெளியிலும், பெண்களுக்கு பெண்குறியின் உட்புறம் கருப்பைவாசல் அருகிலும் மூலாதாரச்சக்கரமானது அமைந்துள்ளது.

மூலாதாரச்சக்கரத்திற்கு சற்று ஏற்புறமாக,சுமார் நான்கு விரல் மேலே சுவாதிஷ்டானம் உள்ளது.

மூன்றாவது சக்கரமான ம்ணிபூரகம் நாபியின் பின்னே முதுகுத்தண்டில் அமைந்துள்ளது.

இதன் பின்னால் இதயத்துக்கு நேர் பின்புறம் முதுகுத்தண்டில் அநாகத சக்கரமானது அமைந்துள்ளது.

விசுக்தி சக்கரம் மைய கழுத்துக்குப் பின்னால் அதே முதுகுத்தண்டில் அமைந்துள்ளது.

ஆக்ஞை சக்கரம் முதுகுத்தண்டின் உச்சியில், இரு புருவங்களுக்கும் இடையே நேர் பின்புறம் அமைந்துள்ளது.

கடைசியில் சகஸ்ரதளமானது தலையின் மேற்புறம் கவிழ்ந்த நிலையில் ஆயிரம் இதழ்களுடன் காணப்படுகிறது.

மேலும்
மூலாதாரமானது நிலத்துடனும்,
சுவாதிஷ்டானம் நீருடனும்,
மணிபூரகம் காற்றுடனும்,
அநாகதம் நெருப்புடனும்,
விசுக்தி ஆகாயத்துடனும் தொடர்பு கொண்டுள்ளன.


இந்த ஏழு சக்கரங்களும்  நலமாக இயங்கும்வரை உடல் நலமுடன் இயங்கும் என்றும், இவற்றில்  ஏதும் தடைகள், தேக்கங்கள் உன்டானால் பொது உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும்.  இந்த பாதிப்புகளை இலகுவாக நிவர்தி செய்யவே முத்திரைகள்  பயன்படுகின்றன. இந்த முக்கிய சக்கரங்கள் நமது விரல்களால் கட்டுபடுத்தப்படுகிறது என்று தன்வந்திரி கூருகின்றார்.
1. மோதிரவிரல் - மூலாதாரம்
2. சுண்டுவிரல் - சுவாதிஷ்டானம்
3. கட்டைவிரல் - மணிபூரகம்
4. சுட்டுவிரல் - அநாகதம்
5. நடுவிரல் - விசுக்தி



சக்கரம்_______தொடர்பு__சப்தம் __கட்டுபடுத்தும் விரல்__அமைந்துள்ள இடம்

1. மூலாதாரம் --------- நிலம் -------வம்ம்ம் -- மோதிரவிரல்--------------மலத்துவாரத்துக்கும் அருகில்
  
2. சுவாதிஷ்டானம் - -நீர் -----------லம்ம்ம் ---சுண்டுவிரல்----------------மூலாதாரத்திற்கு நான்கு விரல் மேலே

3.  மணிபூரகம்-----------காற்று -----ரம்ம்ம் ----கட்டைவிரல்---------------நாபியின் பின்னே முதுகுத்தண்டில்

4. அநாகதம்---------------நெருப்பு --யம்மம்----சுட்டுவிரல்----------இதயத்துக்கு நேர் பின்புறம் முதுகுத்தண்டில்

5. விசுக்தி-----------------ஆகாயம்---ஹ்ம்ம் ---நடுவிரல்---------மைய கழுத்துக்குப் பின்னால் முதுகுத்தண்டில்

6. ஆக்ஞை ------------------------------ ஒம்ம்ம்----------------------------இரு புருவங்களுக்கும் இடையே நேர் பின்புறம்

7. சகஸ்ரதளம்--------------------------------------------------------------------தலையின் மேற்புறம்

1
 
 2
  
3
 
4
 
5
 
6
 
7
 






மனித உடலினுள் கண்ணுக்குத் தெரியாமல் செயல்படுகின்ற ஏழு சக்கரங்கள், உடலிலுள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டினையும்
தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. இந்த ஏழு சக்கரங்களும்
உடலின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஏழு சக்கரங்களையும் அவை கட்டுப்படுத்தும் உறுப்புகளைப்பற்றியும் தெரிந்து கொள்வோம்


மூலாதாரம்

முதுகெலும்பின்அடிப்பாகத்தில் அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம்.உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்திஆகிறது. உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால்மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது.

சிறுநீரகங்களுக்கு மேலுள்ளஅட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில்இருக்கின்றன.சிறுநீரகங்கள்,சிறுநீர்ப்பை,முள்ளந்தண்டுஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம்தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது
The Seven Chakras Aid0174
ஸ்வாதிஷ்டானம்

இதுபாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே
அமைந்திருக்கிறது. பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது.
பாலியல் சக்தியைக் கொடுப்பதிலும் பெறுவதிலும் இதற்கு முக்கிய பங்கு உண்டு.
ஈகோவிற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது. மற்றவர்களின் உணர்ச்சிப்போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களைதாண்டி அறிகின்ற சக்தி இதிலிருந்து தான் கிடைக்கிறது. பாலியல்சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள்,கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

மணிபூரகம்

சோலார்ப்ளெக்ஸஸ் என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. தொப்புளுக்கு சற்று மேலே இதுஇருக்கிறது. உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான்உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது. கட்டுக்கடங்காதஉணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது. அதனால்தான் அதிர்ச்சியோ பயஉணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து
விடுகின்றன. கணையம், என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான்
செயல்படுகிறது. இரைப்பை,கல்லீரல்,பித்தப்பை,மண்ணீரல்,ஆகியவை இதன்கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.

அனாகதம்

இதற்குஇருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம்உள்ள பகுதியில் இது இருக்கிறது. அன்பு,பாசம்,இரக்கம்,சகோதரத்துவம்,விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும்.தைமஸ்
சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல்கள்,இரத்தஓட்டம், கல்லீரல்,ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.

விசுத்தி

இதற்குகுரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களைவெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை.நம்முடைய புலன்களுக்கு அப்பால்அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான்
அறிகிறோம். தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை,மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

ஆக்ஞா சக்கரம்

இதைநெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்குமத்தியில் சற்று மேலாக அமைந்திருக்கிறது. தொலை உணர்தல் ( Telepathy ) தொலைஅறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம்,மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது. இதன் மூலம்தான் விஷயங்களை
உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மீகக்கண் திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள்.

பிட்யூட்டரி சுரப்பி இதன்
கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள்,
மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.

சகஸ்ரஹாரம்

இதற்குதாமரைச் சக்கரம் என்ற பெயரும் உண்டு. இது உச்சந்தலை பகுதியில்அமைந்திருக்கிறது. இந்தச்சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப்பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும்,நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவுபடுத்துகின்ற சக்கரம் இது. என்ன நடக்கப் போகிறது என, அல்லது எதைச் செய்யவேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான்கிடைக்கிறது. பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின்மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.



3 comments:

  1. கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
    நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

    ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

    இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

    தவம் செய்ய வேண்டும்!!!

    தவம் செய்ய நாம் காட்டுக்கு போக வேண்டியதில்லை! குடும்பத்தை விட்டு ஓட வேண்டியதில்லை! காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை! நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும்! உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்! கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம்! சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்! திருமணம் ஞானம் பெற ஒரு தடையல்ல!

    தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல! தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல! தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல! தவம் என்றால், நான் யார்? என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே! முயற்சியே!

    நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

    இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

    திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

    உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
    இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

    அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

    லிங்க்ஐ படியுங்க.

    http://tamil.vallalyaar.com/?page_id=80


    blogs

    sagakalvi.blogspot.com
    kanmanimaalai.blogspot.in

    ReplyDelete
  2. நன்றி ஐயா தங்களுடைய தொலைபேசி எண் தாருங்கள்....08285681145 என்னுடையது...

    ReplyDelete
  3. நன்றி நன்றி நன்றி ஐயா

    ReplyDelete